உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 26, 2011

சிதம்பரம் பஸ் நிலையம் தெற்கு பகுதியில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் சிமென்ட் தளம் பணி

சிதம்பரம் : 

           சிதம்பரம் பஸ் நிலையத்தின் தெற்கு பகுதியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் சிமென்ட் தளம் மற்றும் கழிவுநீர் கால்வாய், பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது.
 
            சுற்றுலா நகரமான சிதம்பரத்தில் நடராஜர் கோவில், பிச்சாவரம் வனச்சுற்றுலா மையம், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் இருப்பதால் ஆயிரக்கணக்கில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ, மாணவியர்கள், அரசு ஊழியர்கள் தினமும் சிதம்பரம் வந்து செல்கின்றனர். பல்லாயிரக்கணக்கான பயணிகள் பஸ் நிலையம் வந்து செல்லும் நிலையில் "பி" கிளாஸ் அந்தஸ்து பெற்ற சிதம்பரம் பஸ் நிலையத்தில் அடிப்படை வசதிகளின்றி கழிப்பிட வசதி கூட இல்லாமல் படுமோசமாக உள்ளது.
 
              பயணிகள் ஓய்வெடுக்கத்தான் வழியில்லை என்றாலும், சில நிமிடங்கள் காத்திருந்து பஸ் ஏறுவதற்கு கூட முடியாத நிலையில் பஸ் நிலையம் முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதற்கிடையே ஆக்கிரமிப்பு வேறு. இடிந்துவிழும் நிலையில் பஸ் நிலையத்தில் கடைகள் உள்ளதால் மழைக்காலங்களில் பயணிகள் நிற்பதற்கே அஞ்சுகின்றனர். இரவு நேரத்தில் பயணிகளுக்கு போதிய பாதுகாப்பு இல்லை. பஸ் நிலைய வாயில் பகுதியிலேயே டாஸ்மாக் கடை தொல்லை. சிறு நகரங்களில் கூட பஸ் நிலையங்கள் சிறப்பாக இயங்கும் நிலையில் சுற்றுலாத் தலமான சிதம்பரத்தில் சொல்லிக்கொள்ளும் நிலையில் பஸ் நிலையம் இல்லை.
 
             பஸ் நிலையத்தை சீரமைக்க பல தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து இயற்கை இடர்பாடுகள் நிவாரண நிதி ஒரு கோடியே 8 லட்சம் ரூபாய் செலவில் கடந்த ஆண்டு பஸ் நிலையத்தின் வடக்குப் பகுதியில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. சிமென்ட் தளம், மழைநீர் வடிகால், பிளாட்பாரம் ஆகியன அமைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெற்கு பகுதியில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவில் தற்போது சிமென்ட் தளம், வடிகால், பிளாட்பாரம் அமைக்கும் பணி துவங்கி நடந்து வருகிறது. நவீன இயந்திரங்கள் கொண்டு பணியை துரிதமாக முடிக்காமல் மெத்தனமாக நடப்பதால் அந்த வழியாக பஸ்கள் நிறுத்துவதற்கும். பஸ்கள் செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டு அடிக்கடி டிராபிக் ஜாம் ஆகிறது.
 
             பணியை துவங்கும்போது அந்தப் பகுதியில் பஸ் நிறுத்துவதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்திருக்கலாம். அல்லது பணியை விரைந்து முடிக்க துரிதமாக செயல்படலாம். ஆனால் மெத்தனமாக நடப்பதால் தினம், தினம், பயணிகளும், பஸ் ஓட்டுநர்களும் அவதியடைந்து வருகின்றனர். பஸ் செல்வதற்கு அருகிலேயே பள்ளம் தோண்டி அதில் சிமண்ட் தளம் அமைப்பதால் எந்த நேரத்திலும் பஸ் அதில் கவிழ்ந்து விடும் அபாய நிலையும் உள்ளது. எனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துவிட்டு பணியை செய்தால் பயணிகளுக்கு நல்லது. எனவே நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior