உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஏப்ரல் 22, 2011

பங்கு வணிகம் குறித்த பாடத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு சோதனை அடிப்படையில் ஆன்லைனில் தேர்வு

கடலூர்:

              பங்கு வணிகம் குறித்த பாடத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு, சோதனை அடிப்படையில் ஆன்லைனில் தேர்வு கடலூரில் புதன்கிழமை நடத்தப்பட்டது.  நிதிக் கல்வி அறிவுத் திட்டத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் வணிவியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு இந்தாண்டு, பங்கு வர்த்தகம் பாடமாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

              கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, கடலூர் புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி என்.எல்.சி. மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் வணிகவியல் பிரிவில் படிக்கும் பிளஸ் 1 மாணவர்களுக்கு பங்கு வர்த்தகம் குறித்த பாடம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.  மேற்கண்ட 4 பள்ளிகளைச் சேர்ந்த வணிகவியல் பாடப் பிரிவு மாணவர்கள் 320 பேருக்கு ஆன்லைனில் தேர்வு, சோதனை அடிப்படையில் புதன்கிழமை நடத்தப்பட்டது. 

              கடலூர் ஜெயராம் பொறியியல் கல்லூரியில் இத் தேர்வு நடைபெற்றது. மாணவர்களுக்கு ஒரு மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டது. ஆன்லைன் தேர்வை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி பார்வையிட்டார். பிளஸ் 1 மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடப்பது இதுவே முதல்முறை என்று கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior