எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் பல்வேறு படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான -எஸ்.ஆர்.எம்.இ.இ.இ. 2011- நுழைவுத் தேர்வு சனிக்கிழமை (ஏப். 23) நடைபெற உள்ளது.
இது குறித்து பல்கலைக்கழகத்தின் முதன்மைக் கல்வி அலுவலர் பொன்னவைக்கோ கூறியது:
எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் பி.டெக்., எம்.டெக்., எம்.பி.ஏ., எம்.சி.ஏ., உள்ளிட்ட படிப்புகளில் 5,500 இடங்களுக்கு, மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. நாடு முழுவதும் 115 நகரங்களில் 190 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறும் இந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்பதற்காக 1 லட்சத்து 36 ஆயிரத்து 126 பேர் பதிவு செய்துள்ளனர். நுழைவுத் தேர்வு முடிவுகள் மே மாதம் 2-வது வாரத்தில் வெளியிடப்படும். சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூன் 12-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை நடைபெறும். கலந்தாய்வுக்கு 14 ஆயிரம் மாணவர்கள் அழைக்கப்படுவர் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக