மதிமுக பொதுச்செயலர் வைகோ வெளியிட்ட அறிக்கையில்,
"இந்திய பொதுத்துறை நிறுவனங்களில் சிறப்பான வளர்ச்சி பெற்று விளங்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது. நாட்டின் உயிர்நாடியான மின்உற்பத்தித் துறையில் என்.எல்.சி. நிறுவனம் தொடர்ந்து சாதனையைப் படைத்து வருகிறது.
கடந்த நிதி ஆண்டில் 1788 கோடி யூனிட் மின்சார உற்பத்தி செய்து சிறப்பான இடத்தைப் பெற்றதுடன் ரூ. 1,247 கோடி லாபம் ஈட்டி என்.எல்.சி. நிறுவனம் சாதனை புரிந்து உள்ளது. எனவே, என்.எல்.சி. நிறுவனத்தின் வெற்றி மகுடத்தில் நவரத்னா என்னும் ரத்தினக்கல் இந்திய அரசால் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்களின் மதிப்புமிக்க உயரிய நவரத்னா விருதைப் பெற்றுள்ள என்.எல்.சி. நிறுவனத்தின் அதிபர், இயக்குனர்கள் மற்றும் என்.எல்.சி. வளர்ச்சிக்காக உழைத்து வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். என்.எல்.சி. மென்மேலும் வளர்ந்து மகாரத்னா விருதையும் பெற்றிட வாழ்த்துவதுடன், என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனமாக ஒளிவீசித் திகழ்ந்திட மதிமுக உறுதுணையாக இருக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக