உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஏப்ரல் 22, 2011

அண்ணாமலைப் பல்கலையில்தொலைதூரக் கல்வி சேர்க்கை விண்ணப்ப விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:
            அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 4.50 லட்சம் பேர் பயில்கின்றனர். கடந்த ஆண்டு மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் பேர் சேர்ந்துள்ளனர் என துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தார்.  
             அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் 2011-12 கல்வி ஆண்டுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 
முதல் விண்ணப்பத்தை வழங்கி விற்பனையை தொடங்கி வைத்து துணைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் தெரிவித்தது: 
               82 ஆண்டுகாலமாக சேவையாற்றி வரும் அண்ணாமலைப் பல்கலையில் ஆண்டுதோறும் 5 முதல் 10 சதவீதம் வரை கூடுதலாக மாணவர்கள் பயின்று வருகின்றனர்.  மொத்தம் 500 பாடப் பிரிவுகள் நடத்தப்படுகிறது. சமுதாய சேவையையும், வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு 48 புதிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. ஆன்லைன் மூலம் எம்பிஏ பைனான்ஸ் மேனேஜ்மெண்ட், மார்க்கெட்டிங் மேனேஜ்மெண்ட், ஹியூமன் ரிசோர்சஸ் மேனேஜ்மெண்ட ஆகிய 3 பாடப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. 
             பண்டமெண்டல் ஆஃப் மீயூட்சுவல் பண்ட்ஸ் என்ற சான்றிதழ் வகுப்பும் தொடங்கப்பட்டுள்ளன.  மீடியா துறையில் முதுகலை டிப்ளமோ இன் நியூஸ் ரீடிங், முதுகலை டிப்ளமோ இன் ரேடியோ டெக்னாலஜி, முதுகலை டிப்ளமா இன் டி.வி. ஜர்னலிசம் ஆகியவை தொடங்கப்பட்டுள்ளன.  கப்பல் துறையில் பணியாற்றுபவர்களுக்காக டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளான லாஜிஸ்டிக்ஸ் சப்ளை செயின் ஆபரேஷன்ஸ், ஷிப்பிங் லாஜிஸ்டிக்ஸ் ஆபரேஷன்ஸ், ஷிப்பிங் போர்ட் ஆபரேஷன்ஸ், டிரான்ஸ்போர்டேஷன் வேர்ஹவுஸ் ஆபரேஷன்ஸ் ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  
              தமிழ் இசைக்காக தொடங்கப்பட்ட இப்பல்கலையில் பி.மியூசிக் நாகஸ்வரம், பி.மியூசிக் தவில், சர்டிபிகேட் புரோகிராம் இன் தேவாரம், சர்டிபிகேட் புரோகிராம் இன் மிருதங்கம் ஆகிய படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.  மாணவர்கள் வசதிக்காக சுமார் 30 கி.மீ. தொலைவில் தொடர்பு கொள்ளும் வகையில் 68 தகவல் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன. 
            ஏற்கெனவே விடியோ கான்பரன்சிங் வசதி புதுதில்லி, சென்னை, சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ளது. இந்த ஆண்டு சேலம், கொல்கத்தா, கோவை, திருச்சி, மதுரை, பெங்களூர் உள்ளிட்ட 10 இடங்களில் விரிவுபடுத்தப்  படும். மாணவர்கள வசதிக்காக ஒய்டு ஏரியா நெட்வொர்க் மூலம் 60 படிப்பு மையங்கள் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்களது கட்டணத்தை கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் 50 மையங்களில் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு கல்விக் கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். தொலைதூரக் கல்வி மையத்தில் பயிலும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். 

         பல்கலைக்கழகத்தில் நேரடியாக படித்த மாணவர்களுக்கும், தொலைதூரக்கல்வி மையத்தில் படித்த மாணவர்களுக்கும் கல்வி கட்டணத்தில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும்.  தொலைதூரக் கல்வி மையத்தின் மூலம் எம்.எட். படிப்பு தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விரைவில் எம்.எட். படிப்பு தொடங்கப்படும் என்றார் ராமநாதன்.  இந்நிகழ்ச்சியில், தொலைதூரக்கல்வி இயக்கக இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ் வரவேற்றார். விழாவில் பதிவாளர் எம்.ரத்தினசபாபதி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சிசுந்தரம், துணை தேர்வு கட்டுப்பாடு அதிகாரி தவமணி, மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம். செனட் உறுப்பினர்கள் தில்லைசீனு, பேராசிரியர் டி.ராஜவன்னியன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.  

பண்ருட்டி : 

               சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தின் 2011-2012-ம் ஆண்டுக்கான சேர்க்கை விண்ணப்பம் வழங்கும் விழா பண்ருட்டியில் உள்ள தகவல் மைய அலுவலகத்தில் வியாழக்கிழமை நடந்தது. விழுப்புரம் தகவல் மைய கண்காணிப்பாளர் சவுகத்அலி தலைமையில் நடைபெற்ற விழாவில், பண்ருட்டி டி.எஸ்.பி. ஆறுமுகம் முதல் விண்ணப்பத்தை வழங்கினார். விழாவில் ஜான்டூவி பள்ளி தாளாளர் வீரதாஸ், பண்ருட்டி மைய அதிகாரிகள் ராமமூர்த்தி, மணிவண்ணன், தியாகராஜன், ஸ்டாலின், ஆதிநாராயணன், சந்தானகிருஷ்ணன், சுரேஷ்நாதன், கெஜலட்சுமி, லதா, கெஜவல்லி, உஷாதேவி, ராமநாதன், கிருபாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

விழுப்புரம்: 

              அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் தொலைதூரக் கல்வி விழுப்புரம் மையத்தில் இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புக்கான விண்ணப்ப விற்பனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். சேவியர்தன்ராஜ் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். முதல் விண்ணப்பத்தை தொழிலதிபர் தியாகராஜன் பெற்றுக்கொண்டார்.  இந்த மையத்தில் பி.ஏ, பி.எஸ்சி., பி.காம், எம்.ஏ, எம்.பி.ஏ, எம்.காம், எம்.எஸ்சி, ஐ.டி. ஆகிய படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுகின்றன. இந்நிகழ்ச்சியில் தொடர்பு அலுவலர் எம். செல்லப்பன், பேராசிரியர் உதயகுமார், கண்காணிப்பாளர் செüகத்அலி, தனி அலுவலர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

கள்ளக்குறிச்சி: 

             அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்கம் கள்ளக்குறிச்சி படிப்பு மையத்தில் 2022-12-ம்  ஆண்டுக்கான விண்ணப்ப விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடந்தது.  நிகழ்ச்சியில் படிப்பு மைய பொறுப்பு அதிகாரி என். பிரதிப்ராஜ் வரவேற்றார்.  சிறப்பு விருந்தினராக கள்ளக்குறிச்சி சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவின் முதுநிலை மேலாளர் எம்.சுந்திரசேகரன், குத்துவிளக்கேற்றி வைத்து பேசினார். 

                 பின்னர், முதல் விண்ணப்ப விற்பனையை தொடங்கி வைத்தார்.  இந்திலி டாக்டர் ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லூரியின் தாளாளர் கே.பி.ஆர்.பாலகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார்.  இதில் பல்கலைக்கழக அலுவலர்கள் வி.அறிவழகன், வி.சுரேஷ், எம்.மணிவண்ணன் மற்றும் அலுவலக ஊழியர்கள் எஸ்.யாமினிதேவி, டி.சிலம்பரசன் என்.ஞானவேல் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior