உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 09, 2011

அண்ணாமலை பல்கலையில் மருத்துவம், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை தொடக்கம்

சிதம்பரம்:

          சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.

           சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 2011 - 2012ம் ஆண்டிற்கான இன்ஜினியரிங் (அனைத்து பாடப்பிரிவுகள்), பி.பார்ம்., பி.பார்ம் (லேட்ரல் என்டரி), 6 வருடம், 3 வருடம் படிப்பு, எம்.எஸ்., முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகள், பி.எஸ்சி., வேளாண்மை, பி.எஸ்சி., தோட்டக்கலை, எம்.பி.பி.எஸ்., - பி.பி.டி., - பி.எஸ்சி., நர்சிங், எம். பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், பி.டி.எஸ்., மற்றும் பல் மருத்துவ சான்றிதழ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கியது.பல்கலைக்கழக பதிவாளர் ரத்தினசபாபதி துவக்கி வைத்து கூறுகையில்,             "விண்ணப்பங்கள் வரும் ஜூன் 10ம் தேதி வரை வழங்கப்படும். அன்றே பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும். எம்.பி.டி., - எம்.எஸ்சி., நர்சிங், டிப்ளமோ நர்சிங் வகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும்' என்றார். நிகழ்ச்சியில், தொலைதூர கல்வி இயக்குனர் நாகேஸ்வரராவ், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மீனாட்சி சுந்தரம், சிண்டிகேட் உறுப்பினர் முத்துக்குமார், அனைத்து துறை முதல்வர்கள், துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior