கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் பார்வையற்றவர்கள் பிரெய்லி எழுத்து முறையில் அமைந்துள்ள டம்மி வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி வாக்களிக்கும் முறை, வெள்ளிக்கிழமை சரிபார்க்கப்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் முன்னிலையில் இதற்கான கூட்டம் நடந்தது. பார்வையற்றவர்கள் வாக்களிக்க பிரெய்லி முறையிலான டம்மி வாக்குச் சீட்டுகள் 100 சதவீதம் தணிக்கை செய்யப்பட்டது. டம்மி வாக்குச்சீட்டுகள் அரசு பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்புப்பள்ளி தலைமை ஆசிரியர் சௌந்தரராஜன், ஆசிரியைகள் நாகவல்லி, பிரியா, ஆசிரியர் சத்தியநாராயணன், ஆகியோரால் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டன.
பின்னர் கடலூர் மாவட்ட ஆட்சியர் கூறியது:
பிரெய்லி எழுத்து படிக்கத் தெரிந்தவர்கள் பிரெய்லி வாக்குச்சீட்டை பயன்படுத்தி வாக்களிக்கலாம். பிரெய்லி எழுத்துக்களைப் படிக்கத் தெரியாதவர்கள் மற்றும் கண்பார்வையின்மை அல்லது உடல்ஊனம் காரணமாக வாக்களிக்க இயலாதவர்கள், தங்களுடன் ஒரு உதவியாளரை அழைத்து வரலாம்.அ வரிடம் உறுதி மொழிப் பத்திரத்தில், ரகசியம் காப்பதாகவும், வேறு யாருக்கும் உதவியாளராக இல்லை எனவும் கையொப்பம் பெற்று அனுமதிக்கலாம்.அவர் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.
ஒரு உதவியாளர் பார்வையற்ற ஒருவருக்காக மட்டுமே, உதவ வேண்டும். பி ரெய்லி முறையில் தயாரிக்கப்பட்ட டம்மி வாக்குச் சீட்டை, வாக்குப் பதிவு அலுவலர் பார்வையற்ற வாக்காளரிடம் வழங்க வேண்டும். வாக்குப்பதிவு செய்த பின்னர் அந்த டம்மி வாக்குச்சீட்டை திரும்பப் பெற வேண்டும் என்றார் ஆட்சியர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக