உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 09, 2011

கடலூர் திமுக எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து அதிரடி நீக்கம்

கடலூர்:

              கடலூர் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டி வேட்பாளராக களம் இறங்கியுள்ள திமுக எம்.எல்.ஏ. கோ.அய்யப்பன் கட்சியில் இருந்து வெள்ளிக்கிழமை நீக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான க.அன்பழகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

                கடலூர் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளராக இள.புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து, அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ. அய்யப்பன் போட்டி வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து களம் இறங்கியுள்ள போட்டி வேட்பாளர்கள் தங்களது மனுக்களை வாபஸ் பெற வேண்டும் என முதல்வர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்திருந்தார். 

              இதுபோன்று போட்டியிடுவது தனக்கு வலியை ஏற்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனாலும், எம்.எல்.ஏ. அய்யப்பன் தனது வேட்புமனுவை வாபஸ் பெறவில்லை. போட்டிக் களத்தில் உள்ளார். இந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து நீக்கி திமுக பொதுச் செயலாளரும், நிதியமைச்சருமான க.அன்பழகன் வெள்ளிக்கிழமை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior