உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
சனி, ஏப்ரல் 09, 2011

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து நடிகை குஷ்பு பிரச்சாரம்

கடலூர்:

            முதல்வர் கருணாநிதியின் திட்டங்களுக்காக தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள் என்று நடிகை குஷ்பு கேட்டுக் கொண்டார்.

கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து கடலூர் உழவர் சந்தை அருகே நடிகை குஷ்பு பேசியது:

             முதல்வர் கருணாநிதி 5 ஆண்டுகளில் மக்களுக்காக நிறைய திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறார். விவசாயிகளின் கடன்கள் ரூ. 7 ஆயிரம் கோடியை தள்ளுபடி செய்தார்.அதில் கடலூர் மாவட்டத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் பயன் அடைந்தனர். முந்தைய தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஏழைப் பெண்கள் திருமண உதவித் திட்டத்தை ஜெயலலிதா நிறுத்தினார். அதை மீண்டும் கொண்டு வந்தவர் கருணாநிதி.

             கடலூர் மாவட்டத்தில் மட்டும் பெண்கள் திருமண உதவித் திட்டத்தில் 22 ஆயிரம் குடும்பங்கள் பலன் அடைந்து உள்ளன. பிரசவ காலத்தில் பெண்களுக்கு நிதிஉதவி அளிக்கும் திட்டத்தில், கடலூர் மாவட்டத்தில் 1.25 லட்சம் பெண்கள் பலன் அடைந்து உள்ளனர். ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் இத்திட்டங்களால் நன்மை அடைந்து உள்ளனர். 

             கருணாநிதியின் திட்டங்களுக்காக கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்திக்கு வாக்களியுங்கள். அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சராக இருந்தபோது தொகுதிக்கும் கடலூர் மாவட்டத்துக்கும் எதுவும் செய்யவில்லை. தி.மு.க. கூட்டணி சாதனையைச் சொல்லி வாக்கு கேட்கிறது. ஆனால் அ.தி.மு.க. கூட்டணியில் யாரும் சாதனையை சொல்லி வாக்குக் கேட்க முடியாது என்றார் குஷ்பு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior