உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், மே 03, 2011

விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் பிச்சாவரத்தில் சுற்றுலா

கிள்ளை:

             சிதம்பரம் அருகே பிச்சாவரத்தில் விழுப்புரம் வனத்துறை சார்பில் நடந்த சூழல் சுற்றுலாவில் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் பங்கேற்றனர். மத்திய அரசின் நிதி உதவியுடன் "கழு வெளி ஈர நில பாதுகாப்புத் திட்டத்தில்' கழுவெளியில் காடு வளர்ப்பிற்காக பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

                அதில் சூழல் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதியில் உள்ள கிராம மக்கள், கிராம வனக்குழு உறுப்பினர்கள், கல்லூரி மாணவர்கள், பி.எட்., மாணவர்கள் மற்றும் பல்துறை அரசு ஊழியர்கள் பயன் பெறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சூழல் சுற்றுலா நடத்தப்பட்டு வருகிறது.
 
              பிச்சாவரத்தில் நடந்த விழாவில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து தனியார் கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி, பி.எட்., மாணவர்கள், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வணிக வரித்துறை ஊழியர்கள் பங்கேற்றனர். திண்டிவனம் வனச்சரக அலுவலர் வெங்கடேசன், பிச்சாவரம் வனப் பகுதியில் உள்ள தாவரங்கள், அப்பகுதியல் வளர்க்கப்படும் காடுகள், கடற்கரையோரம் உள்ள மக்களின் வாழ்வாதாரம், கிராம சமுதாய அபிவிருத்திப் பணிகள், சுற்றுச்சூழல் கல்வி, விழிப்புணர்வு குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். பின்னர் பிச்சாவரம் வனப்பகுதி சுற்றுலாவில் பங்கேற்றவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior