உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், மே 03, 2011

வடலூரில் மின் மயானம் அமைக்கக் கோரிக்கை

நெய்வேலி:
 
              வடலூர் நகரில் மின்சார மயானம் அமைக்கவேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் பேரூராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
                  கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தாலுக்காவில் உள்ள வடலூரில் சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் வடலூர் நகரம் விரிவடைந்து பல்வேறு அடிப்படை வசதிகளும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் வடலூருக்கான மயானம் மட்டும் போதிய இடவசதியின்றியும், ஆக்கிரமிப்பாளர்களால் அபகரிக்கப்பட்டும் வருவதோடு. சுகாதார சீர்கேட்டின் பிடியில் சிக்கி தவிக்கிறது.
 
            அவ்வழியே சடலங்களையும் எடுத்துச் செல்லமுடியாமலும், சடலங்களை புதைக்க இடம் கிடைக்காத நிலையும் உள்ளது. வடலூர் பேரூராட்சி நிர்வாகம் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வடலூர் வர்த்தக சங்கம் சார்பில் மின் மயானம் அமைக்கவேண்டும் என்று கடலூர் எம்பி கே.எஸ்.அழகிரியிடம் கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக எம்.பி., அழகிரி, மாவட்ட ஆட்சியரிடமும் முறையிட்டுள்ளார். இந்நிலையில் வடலூர் நகரில் உள்ள பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும், வடலுர் நகரில் மின்மயானம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடலூர் பேரூராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றன.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior