சொரத்தூர் ராஜேந்திரன்
கடலூர்:
குறிஞ்சிப்பாடி தொகுதியில் 23,848 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தோல்வியை தழுவினார்.
எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் சொரத்தூர் ராஜேந்திரன்
வெள்ளிக்கிழமை இரவு 10-30 மணி நிலவரப்படி இறுதிச் சுற்றில், சொரத்தூர் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) 88,345 வாக்குகளும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் (தி.மு.க.) 64,497 வாக்குகளும் பெற்றனர். இருவருக்கும் உள்ள வாக்கு வித்தியாசம் 23,848 ஆகும்.
இந்நிலையில் இத்தொகுதியில் 10 வாக்குப் பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை பணி தடைபட்டது. இதைத் தொடர்ந்து பழுதான வாக்குப் பதிவு இயந்திரங்களைச் சரி செய்து, அவற்றில் உள்ள வாக்குகளையும் சேர்த்து எண்ணப்பட்ட பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக