உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 16, 2011

நிறைவுபெறும் நிலையில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம்

சிதம்பரம்:

             சிதம்பரத்தை அடுத்த குமராட்சி பகுதியில் சுமார் 86 கிராமங்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டு வரும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது.

             சிதம்பரத்தை அடுத்த குமராட்சி, புளியங்குடி, நெய்வாசல் உள்ளிட்ட சுமார் 86 கிராமங்களுக்கு குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது. இக்கிராமங்களில் சுனாமியின் போது ஏற்பட்ட மாற்றத்தால் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மையாக மாறியது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகினர். இதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு குடிநீóர் வடிகால் வாரியத்தின் மூலம் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கவில்லை.

             இந்நிலையில் தமிழக அரசு ரூ.17 கோடி செலவில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து அத்திட்டத்தை கொண்டு வந்தது. இத்திட்டத்தின் கீழ் புளியங்குடி அருகே கொள்ளிடம் ஆற்றில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினரால் நீருற்று கிணறு அமைக்கப்பட்டு வென்னையூர் வழியாக குழாய்கள் புதைக்கப்பட்டது. இத்திட்டத்தில் 35 கி.மீ. ஒரு பிரிவாகவும், 15 கி.மீ. ஒரு பிரிவாகவும் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் குழாய்கள் சிதம்பரம் அருகே உள்ள புஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தில் முடிவடைகிறது. 

            இந்த கூட்டு குடிநீர் திட்டத்தின் நீரை சேமித்து வைக்க மேற்கண்ட கிராமங்களில் குடிநீர் தேக்க தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 87 கிராமங்களும், இவையல்லாமல் 121 வழியோர கிராமங்களும் பயன்பெறும். இத்திட்டப் பணிகள் ஒரு பிரிவு மே மாத இறுதியிலும், மற்றொரு பிரிவு ஜூன் மாதம் இறுதிக்குள் முடிவுறும் என குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior