கடலூர் :
கடலூர் சில்வர் பீச்சில் உடைந்து கிடக்கும் விளையாட்டு உபகரணங்களை சரி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலூர் நகர மக்கள் பொழுது போக்கும் இடமாக தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ளது. இங்கு சிறுவர்களுக்காக சறுக்கு மரம், ஊஞ்சல் உட்பட பல்வேறு விதமான விளையாட்டு உபகரணங்கள் உள்ளது. இந்த உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. தற்போது சுட்டெரிக்கும் கத்திரி வெயிலை சமாளிக்க பொதுமக்கள் சில்வர் பீச்சில் மாலை நேரங்களில் குவிந்த வண்ணம் உள்ளனர். கடலின் அழகை குடும்பத்துடன் கண்டு ரசித்து பொழுதை உற்சாகமாக கழித்துச் செல்கின்றனர். ஆனால் பெற்றோருடன் ஆர்வத்துடன் வரும் குழந்தைகள், விளையாட்டு உபகரணங்கள் உடைந்து கிடப்பதால் ஏமாற்றுத்துடன் வீட்டிற்கு செல்கின்றனர்.
சிறுவர்களின் ஏமாற்றத்தை தவிர்க்கும் வகையில் உடைந்து காணப்படும் விளையாட்டு உபகரணங்களையும், ஹைமாஸ் விளக்கையும் சரி செய்ய வேண்டும். பொதுமக்கள் தாங்கள் கொண்டு வரும் திண்பண்டங்களை சாப்பிட்டு விட்டு, அவைகளை எடுத்து வர பயன்படுத்திய பேப்பர், பிளாஸ்டிக் பைகளை அங்கேயே போட்டு விடுகின்றனர். பிளாஸ்டிக் பொருட்கள் காற்றில் பறந்து ஆங்காங்கே சிதறிக் கிடப்பது பொதுமக்களை முகம் சுளிக்க வைக்கிறது. குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக