சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் பல மாதங்களாக பூட்டியே கிடக்கும் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்.
சிதம்பரம்:
சிதம்பரம் அருகே நாஞ்சலூர் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், கடந்த பல மாதங்களாக பூட்டப்பட்ட நிலையில் உள்ளது. இதனால், தேவையான சான்றுகள் பெற முடியாமல் பொதுக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போதிய கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்கள் பூட்டப்பட்ட நிலையில் உள்ளன. இதனால் பொதுமக்கள் சிட்டா-அடங்கல், சான்றிதழ் உள்ளிட்டவை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே காலியான பணியிடங்களில் கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிதம்பரம் கோட்டத்தில் நாஞ்சலூர், சிவாயம், பூலாமேடு, துணிஞ்சிரமேடு ஆகிய கிராமங்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லை.
போதிய கிராம நிர்வாக அலுவலர்கள் இல்லாததால் மேற்கண்ட கிராமங்களுக்கு காட்டுக்கூடலூர் கிராம நிர்வாக அலுவலர் செüந்தரராஜன், கூடுதல் பொறுப்பு வகிக்கிறார். ஆனால் நாஞ்சலூர் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்துக்கு வருவது இல்லை. வாரத்திற்கு ஒருமுறை வந்தாவது இப்பகுதி மக்களுக்கு தேவையான சான்றிதழ்களை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக