உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 27, 2011

மருத்துவ விண்ணப்பம் சேர்ந்து விட்டதா? இணையதளத்தில் அறிய வசதி


சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் பூர்த்தி செய்யப்பட்ட எம்.பி.பி.எஸ். விண்ணப்பத்தை வியாழக்கிழமை
 
             தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பித்து வரும் மாணவர்கள், தங்களது விண்ணப்பம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவைச் சென்று விட்டதா என்பதைத் தெரிந்து கொள்ள இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது.
 
              சென்னை உள்பட 17 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,653 எம்.பி.பி.எஸ். இடங்கள், 8 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 600-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 900-த்துக்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேர இதுவரை 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பத்தைப் பெற்றுள்ளனர்.
 
             விண்ணப்பத்தைப் பெறவும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளிக்கவும் ஜூன் 2-ம் தேதி கடைசி நாளாகும். எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க ஜூன் 21-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 30-ம் தேதி, முதல் கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.இணையதளத்தில் வசதி: பள்ளிகளில் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (மே 25) முதல் வழங்கப்பட்டு வருவதால், எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் சேர விண்ணப்பம் பெற்ற மாணவர்கள், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பி வருகின்றனர். 
 
               சில மாணவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்வி இயக்குநர் வளாகத்தின் தேர்வுக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் போட்டு வருகின்றனர்.இ தே போன்று டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேரவும் ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பத்தைப் பெற்று பூர்த்தி செய்து அளித்து வருகின்றனர். எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மற்றும் டிப்ளமோ (நர்சிங்), பி.எஸ்ஸி. (நர்சிங்) உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த படிப்புகளில் சேர பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அளித்துள்ள மாணவர்கள், தங்களது விண்ணப்பம் சேர்ந்துவிட்டதை தமிழக அரசின் இணையதளம்  மூலம் உறுதி செய்து கொள்ளலாம். இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ள காலியிடத்தில் விண்ணப்ப எண் அல்லது பிளஸ் 2 தேர்வு பதிவு எண் ஆகிய ஏதாவது ஒன்றை "டைப்' செய்யும் நிலையில் விண்ணப்பம் சேர்ந்து விட்டதை எளிதாக உறுதி செய்து கொள்ள முடியும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஷீலா கிரேஸ் ஜீவமணி கூறினார்.
 
 முகவரி 
 
http://www.tnhealth.org/

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior