
நெய்வேலி:
ஜூலை 1 முதல் 10-ம் தேதி 14-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி வட்டம் 11-ல் உள்ள லிக்னைட் அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான அரங்கு அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகிறது.
பழுப்பு நிலக்கரியை வெட்டியெடுத்து மின்சாரம் தயாரித்து அதை தென் மாநிலங்களுக்கு விநியோகத்து வரும் என்.எல்.சி. நிறுவனம் சமூகப் பார்வையோடு கடந்த 13 ஆண்டுகளாக தொடர்ந்து புத்தகக் கண்காட்சியை நடத்தி வருகிறது. தற்போது 14-ம் ஆண்டுக்கான புத்தகக் கண்காட்சி வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்கான அரங்குகள் அமைக்கும் லிக்னைட் அரங்க வளாகத்தில் நடைபெறுகிறுது. சுமார் 160 அரங்குகள் அமைக்கும் பணியை என்.எல்.சி. நகர நிர்வாகம் மேற்கொண்டுவருகிறது.
புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகத்தை மட்டுமே இருக்கும் என்ற எண்ணத்தை போக்கும் வகையில், சில பொழுதுபோக்கு அம்சங்களும் இக்கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிறுவர்களை மகிழ்விக்கும் விதமாக ரங்கராட்டினம், டோராடோரா, பொம்மை ரயில் உள்ளிட்ட பல விளையாட்டு சாதனங்களும் இடம்பெற்றுள்ளன. இப் புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தின் முன்னணி பதிப்பகத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது படைப்புகளை பொதுமக்களின் பார்வைக்காகவும் விற்பனைக்காகவும் வைக்கவுள்ளனர். பு
த்தகக் கண்காட்சி நிகழ்வின் போது, மாலை நேரங்களில் லிக்னைட் ஹாலில் தினம் எழுத்தாளர், ஒரு பதிப்பாளர் பாராட்டி கெüரவிக்கப்படுவதோடு, ஒரு புத்தகமும் வெளியிடப்படும். அதைத் தொடர்ந்து சிறந்த கலைஞர்களைக் கொண்ட கலைநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. புத்தகக் கணகாட்சி அரங்கினுள் பார்வையிட வரும் பார்வையாளர்கள் சற்று களைப்பாறும் விதமாக கண்காட்சி அரங்க வளாகத்திலேயே தரமான, விலை குறைவான சிற்றுண்டி அங்காடிகளும் இடம்பெற்றுள்ளன.
கண்காட்சியை காண வெளியூர்களில் இருந்துவரும் பார்வையாளர்களுக்காக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம், புத்தகக் கண்காட்சி நடைபெறும் இடம் வரை சென்று வர பஸ் வசதியையும் புத்தகக் கண்காட்சிக் குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் சிறப்பு என்.எல்.சி. பஸ்களும் இயக்கப்படவுள்ளன. இந்த புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் புத்தகக் கண்காட்சிக் குழுவின் செயலர் ஜார்ஜ் ஜேக்கப் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சி.செந்தமிழ்செல்வன் தலைமையில் நடைபெறுகிறது.
தினமணியுடன் இணைந்து...
இன்றைய இளைய சமுதாயத்தினரிடம் வாசிக்கின்ற பழக்கம் குறைந்து வருகின்ற நிலையில், அவர்களிடம் மீண்டும் வாசிக்கும் பழக்கத்தையும் சுயசிந்தனையுடன் தங்களது கற்பனைத் திறனையும், எழுத்துத் திறைமையையும் வளர்க்கும் விதமாக தினமணி நாளிதழும்-நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழுவும் கடந்த 13 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இடையே மாநில அளவில் கட்டுரைப் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி வருகிறது.
இப்போட்டிகளில் ஏராளமான மாணவ,மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் இப் போட்டியில் பங்கேற்கும் மாணவ,மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காணும்போது, தினமணியும்-நெய்வேலி புத்தகக் கண்காட்சியும் மாணவ,மாணவியரிடத்தில் ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளது நிரூபணமாகியுள்ளது. கட்டுரைப் போட்டிக்கான தலைப்பு, நாள் இவற்றை பிரசுரிக்கும் முன்னரே, ஒவ்வொரு ஊரிலிருந்தும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் தினமணி அலுவலகத்தையும், நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி குழுவுக்கான அலுவலகத்தையும் தொடர்பு கொண்டு, எப்போது கட்டுரைப் போட்டி, அது தொடர்பான செய்தியை பிரசுரித்து விட்டீர்களா என்று கேட்டறிகின்றனர். எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் விதமாக சிறுகதைப் போட்டி நடத்தி, அவர்களுக்கு பரிசுகளை வழங்கி வருவதோடு அக் கதைகளை தினமணி கதிரில் பிரசுரித்து வருகிறது.
திரைப்படத் துறையினரை ஊக்குவிக்கும் பொருட்டு குறும்படப் போட்டியை நடத்தி, சிறந்த இயக்குநர்கள் அடங்கிய குழுவின் மூலம் சிறந்த குறும்படங்களை தேர்வு செய்து அதை இயக்கிய இயக்குநர்கள், பங்கேற்ற கலைஞர்களுக்கு பரிசுத் தொகையையும் வழங்கிவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக