கடலூர் :
பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் வேலை வாய்ப்பு பதிவை இணைய தளம் மூலமாக பள்ளியில் பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக செய்திக்குறிப்பு:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இணைய தளம் மூலம் அவர்கள் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவு செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் கடலூரில் நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். சி.இ.ஓ., அமுதவல்லி, டி.இ.ஓ.,க்கள் பாரதமணி, பத்ரூ, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் அருள்மொழிதேவி, வேலைவாய்ப்பு அலுவலர் பங்கேற்றனர். இணையதளத்தில் வேலைவாய்ப்பு பதிவை வரும் 20ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை பதிவு செய்து கொள்ளலாம்.
தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் தங்களின் பெயர், தந்தை மற்றும் தாய் பெயர், வீட்டு முகவரி (ரேஷன் கார்டில் உள்ளபடி) மொபைல் எண், ரேஷன் கார்டு ஜெராக்ஸ் ஆகியவற்றை தாங்கள் படித்த பள்ளித் தலைமை ஆசிரியரிடம் வரும் 19ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். பதிவிற்காக வேலை வாய்ப்பு அலுவலகம் செல்லத் தேவையில்லை. தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பதிவு செய்ய இயலாது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக