உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 09, 2011

கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

கடலூர் : 

         வேலைவாய்ப்பற்ற உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
 
இது பற்றி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

              மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு 1.7.2011 முதல் 30.09.2011 வரை முடியும் காலாண்டுக்கு உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. இதனை பெற எஸ்.எஸ்.எல்.சி.,-எஸ். எஸ்.எல்.சி., தவறியவர் (பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தவறியவர்கள் மட்டும்) பி.யு.சி, மேல்நிலை வகுப்பு, பட்டப் படிப்பை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, 30.06.2011ல் ஐந்து ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியிருக்கு வயது 45, மற்றவர்களுக்கு 40க்குள் இருக்க வேண்டும். பதிவை தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும். 

             அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருக்கக் கூடாது. ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் தற்போது சேர்ந்து படித்துக் கொண்டிருக்கக் கூடாது. ஆனால் அஞ்சல் வழிக்கல்வி அதாவது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண்ணப்பிக்கலாம். மனுதாரர் தமிழகத்தில் படித்தவராக இருக்க வேண்டும். அல்லது அவரது பெற்றோர், பாதுகாவலர் தமிழகத்தில் 15 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் 50 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்.
 
             இத்தகைய விவரங்களின் அடிப்படையில் தகுதி உள்ளவராக இருப்பவர்கள் தங்களது கல்விச் சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அசல் அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வேலை வாய்ப்பு அலுவலகம் வந்து இலவசமாக விண்ணப்பம் பெறலாம். ஏற்கனவே விண்ணப்பம் செய்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior