உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 09, 2011

பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் ரொக்கப் பரிசு

பண்ருட்டி:

            பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் 1000 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர் ரொக்கப் பரிசு அளித்து பாராட்டினார். 

            பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி இறைவணக்க கூட்டத்தில் புதன்கிழமை கலந்துக்கொண்டார் தொழிலதிபர் ஆர்.சந்திரசேகர்.  2010-2011-ம் கல்வி ஆண்டில் பிளஸ் டூ பொதுத் தேர்வில் 1078 மதிப்பெண் எடுத்த கிருஷ்ணனுக்கு ரூ.5000, 1066 மதிப்பெண் எடுத்த பாலகிருஷ்ணனுக்கு ரூ.2500, 1061 மதிப்பெண் எடுத்த கிருஷ்ணகுமாருக்கு ரூ.1500 மற்றும் ஆயிரத்துக்கும் மேல் எடுத்த இருமாணவர்களுக்கு தலா ரூ.1000-ம் ரொக்கப்பரிசு வழங்கினார்.

           இத்தொகையை தான் பள்ளியின் முன்னாள் மாணவர் என்ற முறையிலும், மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கிலும் வழங்கியதாக அவர் கூறினார். பிளஸ் டூ பொதுத் தேர்வில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் எத்தனை பேர் எடுத்தாலும் ரொக்கப் பரிசு வழங்குவதாகக் கூறினார். 

              பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். உதவி தலைமையாசிரியை அமலி வரவேற்றார். முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் அ.ப.சிவராமன், முன்னாள் கவுன்சிலர் வி.பாலகிருஷ்ணன், ஆசிரியர் (ஓய்வு) மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி தலைமையாசிரியை சுசீலா, முத்த முதுகலை ஆசிரியர் தீனதயாளன், என்.சி.சி அலுவலர் ஜெ.பாலசந்தர், என்.எஸ்.எஸ். அலுவலர் எஸ்.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். ஆசிரியர் சங்கச் செயலர் ஜி.பூவாராகவமூர்த்தி நன்றி கூறினார்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior