உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜூலை 29, 2011

கடலூர் தேவன்குடியில் புதிய பழுப்பு நிலக்கரி சுரங்கம்

நெய்வேலி:

              கடலூர் மாவட்டம் தேவன்குடியில் அமையவுள்ள புதிய சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரி முழுவதும், அதைப் பயன்படுத்தும் சிறிய, பெரிய நிறுவன வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படும் என என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.  

                மண்டல நிலக்கரி உபயோகிப்பாளர்கள் குழுவின் 2-வது கூட்டம் நெய்வேலியில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி தலைமையில் நடந்தது. 

இக்கூட்டத்தில் அன்சாரி பேசுகையில், 

               என்எல்சி நிறுவனம் தனது தேவை போக எஞ்சியிருக்கும் பழுப்பு நிலக்கரியை விற்பனை செய்வதற்காக மேற்கொண்டுவரும் கொள்கைகளையும், நடைமுறைகளையும் விவரித்தார்.  மேலும் என்எல்சி அனல்மின் நிலையங்களுக்கு பழுப்பு நிலக்கரி வழங்குவதற்காகத் தான், பழுப்பு நிலக்கரிச் சுரங்கங்கள் செயல்படுத்தப்படுகின்றன. எனவே தங்களது பிரதான நோக்கத்துக்காக பயன்படுத்தியது போக எஞ்சிய பழுப்பு நிலக்கரியை மட்டும் தான் பிற உபயோகிப்பாளர்களுக்கு வழங்கமுடியும். 

                 எனவே எரிபொருள் வழங்கும் ஒப்பந்தங்களை பிற நிறுவனங்களுடன் மேற்கொள்ள முடியாது என்றார்.  இருப்பினும் என்எல்சி நிறுவனம், 2-ம் சுரங்கத்தின் தென்பகுதியில் உள்ள தேவன்குடி கிராமத்தில் புதிதாக சுரங்கம் அமைக்கவிருக்கிறது. இச்சுரங்கத்திலிருந்து வெட்டியெடுக்கப்படும் பழுப்பு நிலக்கரியிலிருந்து ஆண்டுக்கு 20 லட்சம் டன் பழுப்பு நிலக்கரியை பிற உபயோகிப்பாளர்களுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  மேலும் ஜெயங்கொண்டத்தில் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் பணி துவங்கியவுடன், அங்கிருந்து 5 சதவீதம் உபயோகிப்பாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் அன்சாரி தெரிவித்தார். 

               இக்கூட்டத்தில் நிலக்கரி உபயோகிப்பாளர் குழுவைச் சேர்ந்த சி.டி.மெய்யப்பன், டி.பாணிமகேஷ், என்.ஜெயப்ரகாஷ். எஸ்.பி.சும்சுதீன், பி,ராயலு, மப்பண்ணா கஞ்ச்கிரி மற்றும் டால்மியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஏ.சங்கர் நடராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  முன்னதாக என்எல்சி சுரங்க இயக்குநர் பி.சுரேந்தரமோகன் வரவேற்றார். விற்பனைத் துறை பொதுமேலாளர் மோகன் நன்றி கூறினார்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior