உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஜூலை 29, 2011

முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

சிதம்பரம் : 

              முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என மின் துறை அதிகாரி கேட்டுக் கொண்டுள்ளார். 

இதுகுறித்து சிதம்பரம் மின்துறை செயற் பொறியாளர் செல்வசேகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

             சிறப்பு முன்னுரிமையின் அடிப்படையில் விவசாய விண்ணப்பங்கள் ஆண்டுதோறும் அரசு ஆணைப்படி விடுவிக்கப்படுகிறது. விதவைகள், மாற்றுத்திறனாளிகள், மலைவாழ் மக்கள், கலப்பு திருமணம் புரிந்தவர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். 

ராணுவத்தில் பணிபுரிபவர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர்கள் 

இணை இயக்குனர், 
முன்னாள் படைவீரர் நல இயக்கம் 22, 
ராஜா முத்தையா சாலை, 
சென்னை-3 என்ற 

அலுவலகத்திலும், 

மற்ற பிரிவினர் 

மேற்பார்வை பொறியாளர், 
144 அண்ணா சாலை, 
சென்னை-2


என்ற அலுவலகத்திலும் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு செய்வதற்காக படிவங்களை அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior