உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

கடலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்சை தேவையின்றி அழைத்தால் கடும் நடவடிக்கை

கடலூர்:

              அரசு ஆம்புலன்ஸ் 108 வாகனத்தை தேவையில்லாமல் அழைத்தாலோ, அதன் ஊழியர்களைத் தாக்கினாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடலூர்  மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி எச்சரித்தார். 

 ஆட்சியர் அண்மையில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:  

               தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் இலவச சேவை திட்ட வாகனங்கள் 19 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டு, மாவட்ட மக்களுக்கு பயன்படக் கூடிய அளவில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆம்புலன்சை பயன்படுத்தி உள்ளனர். மாதம் 2,500-க்கும் மேற்பட்டோர் பயனடைகிறார்கள்.  அதிகமான அழைப்புகள் வருவதால் 108 ஆம்புலன்ஸ் கிராமங்களுக்கு 15 முதல் 20 நிமிடங்களுக்குள்ளும், நகர்புறங்களில் 10 முதல் 15 நிமிடங்களிலும் சென்றடைகின்றன. 

             தேவையற்ற, தவறான, பொய்யான அழைப்புகளைத் தவிர்ப்பதன் மூலம், உண்மையான அவசரத் தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் சேவை விரைவில் கிடைக்கும். ஆம்புலன்ஸில் தேவையான மருந்துகள், எல்லா வசதிகளும் உள்ளன.  நோயாளிகளின் வசதி கருதி அவர்களுடன் ஆம்புலன்ஸில் ஒருவர் அல்லது இருவர் மட்டும் பயணிக்க வேண்டும் என்றும் ஆட்சியர் கேட்டுகொண்டுள்ளார். 
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior