உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை: சாலையில் நிறுத்தப்படும் அவலம்

சைக்கிள் பராமரிப்பு நிலையமோ என்று வியக்கும் வண்ணம், போக்குவரத்து நெரிசல் மிகுந்த கடலூர் லாரன்ஸ் சாலையில், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் நூற்றுக்கணக்கான  வாகனங்களை
கடலூர்:


          கடலூர் லாரன்ஸ் சாலையில் நிறுத்தப்படும் நுற்றுக்கணக்கான சைக்கிள்களை பார்க்கும்போது, இது நெடுஞ்சாலையா நகராட்சி சைக்கிள் நிறுத்தும் இடமா என்ற சந்தேகம் பொதுமக்களுக்கு எழுகிறது. 
                இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடலூர் லாரன்ஸ் சாலை மிகவும் பழைமையான சாலை. இச்சாலையில் இருபுறமும் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் நிறைய உள்ளன. மற்றும் ரயில்வே புறம்போக்கு நிலங்களும் அதிகம் உள்ளன. கோயில் நிலங்களை மிகக் குறைந்த வாடகைக்கும், ரயில்வே நிலங்களையும் நெடுஞ்சாலையையும் சட்ட விரோதமாக ஆக்கிரமித்தும், பெருவணிகர்கள் பலர், அடுக்கு மாடிக் கட்டடங்களைக் கட்டிக் கொண்டு, கோடிக் கணக்கில் வணிகம் செய்து வருகிறார்கள். 
             எனினும் கோயில்களுக்கு வருவாய் பெரிதாக ஒன்றும் இல்லை. வாகன நெரிசலும், ஆட்டோக்களின் கட்டுப்பாடற்ற நிலையும், நடைபாதைக் கடைக்காரர்களின் தடையற்ற வியாபாரமும், லாரன்ஸ் சாலையில் செல்லும் பொதுமக்களை, தொடர்ந்து இன்னல்களுக்கு ஆளாக்கி வருகின்றன. இங்கு சட்டத்தை மீறுவோர் அனைவரும், போலீஸ் நடவடிக்கைகளை எல்லாம் தூக்கி எறியும் சர்வ வல்லமை படைத்தவர்களாக இருக்கிறார்கள். அண்மைக் காலமாக லாரன்ஸ் சாலையின் இருபுறமும், சைக்கிள்களை நிறுத்திச் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
            லாரன்ஸ் சாலையோரக் கடைகளில் பணிபுரிவோர், பொருள்களை வாங்க வரும் பொதுமக்கள்தான் இங்கு இருசக்கர வாகனங்களை நிறுத்துகிறார்கள் என்று பலரும் நினைத்துக் கொண்டு இருக்கக் கூடும். ஆனால் பஸ்களிலும், ரயில்களிலும் காலையில் வெளியூர் சென்று, இரவில் திரும்பும் நூற்றுக் கணக்கானோர், இங்கு இருசக்கர வாகனங்களை நிரந்தமாக நிறுத்தி விட்டுச் செல்வது வாடிக்கையாகிவிட்டது. மிக அருகில் ரயில்வே கட்டண இரு சக்கர வாகன பாதுகாப்பிடம் இருந்தும், சாலையோரம் நூற்றுக்கணக்கான வாகனங்களை நிறுத்திவிட்டுச் செல்வது, போக்குவரத்துக்குப் பெரிதும் இடையூறாக உள்ளது. 

             அதையொட்டி ஆட்டோக்களும் நிறுத்திக் கொள்வது, எங்களை என்ன செய்துவிடமுடியும் என்று பொதுமக்களையும் போலீஸாரையும் பார்த்து ஏளனம் செய்வதாக அமைந்துள்ளது. நெரிசல் மிகுந்த சாலையை, சைக்கிள் நிறுத்தும் இடமாக மாற்ற அனுமமதி அளித்தது யார் இதைக் காவல்துறையும் கண்டு கொள்ளாதது ஏன் என்று தெரியவில்லை. அருகில் உள்ள நகராட்சி வணிக வளாகம் இடிக்கப்பட்டு, காலியாக இருக்கும் இடத்தில், நகராட்சி கட்டண சைக்கிள் பாதுகாப்பு நிலையத்தை உருவாக்கினால், நகராட்சிக்கு நாளொன்றுக்கு ரூ. 1,000க்குக் குறைவின்றி வருவாய் கிடைக்கும். லாரன்ஸ் சாலை போக்குவரத்துப் பிரச்னைகளையும் ஓரளவு தீர்க்க முடியும் என்கிறார்கள் பொதுமக்கள். சம்மந்தப்பட்ட துறைகள் கவனிக்குமா?

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior