உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2011

கடலூரில் துறைமுக மேம்பாட்டு பணி: நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு


 http://mmimages.mmnews.in/Articles/2011/Aug/317b21c3-616e-4325-984d-0a64be69ceb9_S_secvpf.gif
 
கடலூர்:

           கடலூர் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதல் முறையாக கடலூருக்கு வந்தார். அவருக்கு மாவட்ட செயலாளரும், தமிழக சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான எம்.சி.சம்பத் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.   பின்னர் அமைச்சர் பழனிச்சாமி அங்கிருந்து காரில் புறப்பட்டு கடலூர் துறைமுகத்துக்கு வந்தார். அங்கு துறைமுக அதிகாரிகள், நாகர்ஜூனா ஆயில் நிறுவனத்தின் செயல் இயக்குனர் மனோகரன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

              பின்னர் துறைமுகத்தின் செயல்பாடுகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் குறித்து அமைச்சர்கள் எம்.சி.சம்பத், செல்விராமஜெயம், கலெக்டர் அமுதவல்லி மற்றும் அதிகாரிகளுடன் அமைச்சர் பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். 
 
பிறகு நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கூறியது:-

                   தமிழ்நாடு கடல்சார் வாரியத்தால் கடலூர் துறைமுகத்தை மேம்படுத்தும் கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. 5 ஆண்டு காலத்தில் இத்துறை முகத்தில் செய்ய வேண்டிய உத்தேச முதலீடு ரூ.150 கோடிகளாகும். அதன் அடிப்படையில் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.   கடலூர் அருகே உள்ள தனியார் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு தேவையான வினைல் குளோரைடு மோனோமார் என்ற மூலப்பொருள் 62 கப்பல்களில் கொண்டுவரப்பட்டு 3 லட்சத்து 93 ஆயிரத்து 738 மெட்ரிக் டன்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

               திருச்சோபுரத்தில் தனியார் துறைமுகம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.   சிலம்பிமங்கலத்தில் குட் எர்த் ஷிப் பில்டிங் நிறுவனத்தின் மூலம் கப்பல் கட்டும் தளம் அமைப்பதற்கு சிறுதுறை முகமாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பரங்கிப் பேட்டையில் தனியார் நிறுவனத்துக்கு 4 ஆயிரம் மெகாவாட் திறன் கொண்ட மின் நிலையத்துக்கு தேவையான நிலக்கரி கையாளுவதற்காக தனியார் துறைமுகம் அமைப்பதற்காக இத்துறைமுகம் அறிவிக்கை வெளியிடப்பட்டள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

             பின்னர் அமைச்சர் பழனிச்சாமி கடலூர் லாரன்ஸ் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைய உள்ள இடத்தையும் நேரில் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் சொரத்தூர் ராஜேந்திரன், சிவசுப்பிர மணியன், முருகுமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior