உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 காவலர்கள் நியமனம்

சிதம்பரம்:

          கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக 350 போலீசாரை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளதாக எஸ்.பி., பகலவன் கூறினார்.

சிதம்பரத்தில் எஸ்.பி., பகலவன்  கூறியது:

            கடலூர் மாவட்டத்தில் பணியாற்ற தமிழக அரசு கூடுதலாக 350 போலீஸ் ஒதுக்கீடு செய்துள்ளது. அதையொட்டி ஏற்கனவே ஆயுதப்படையில் இருந்த போலீசார் மாவட்டம் முழுவதும் உள்ள ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனுக்கும் பணிக்கு பிரித்து அனுப்பப்பட்டுள்ளனர்.சிதம்பரம் உட்கோட்டத்தில் 8 போலீஸ் ஸ்டேஷன், ஒரு போக்குவரத்து காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகியவற்றில் பணி புரிய 60 பேர் அனுப்பப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப போலீசார் பிரித்து அனுப்பப்பட்டுள்ளது. அதனால் மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு குற்றச் சம்பவங்கள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.

               சிதம்பரம் நகரில் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற சம்பவங்களை தடுக்க முதல் கட்டமாக இரண்டு இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. படிப்படியாக 10 இடங்களில் பொருத்தப்படும். சிதம்பரம் நகரில் நடந்துவரும் குற்றங்களை கண்டுபிடிக்க ஏற்கனவே தனிப்படை செயல்படுகிறது. கூடுதலாக தனிப்படை அமைத்து குற்றவாளிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior