உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்க இணையதளம் மூலம் அனுமதிச் சான்றிதழ்


             மின் தூக்கிகள் (லிப்ட்) அமைக்க இணையதளம் மூலம் அனுமதிச் சான்றிதழ்கள் வழங்கப்படும் என மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அறிவித்தார்.
 
சட்டப் பேரவையில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு வியாழக்கிழமை பதிலளித்து அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்ட அறிவிப்புகள்:
 
            எந்த நேரமும் மின் கட்டணம் செலுத்தும் பொருட்டு சென்னையில் மின் கட்டணம் பெறும் இயந்திரங்கள் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது. இந்த வசதியை கோவை மண்டலத்திலும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து மண்டலங்களுக்கும் இந்த வசதி விரிவுபடுத்தப்படும். இதன்மூலம் மின் நுகர்வோர் தங்களது மின் கட்டணத்தை எந்த நேரத்திலும் செலுத்த முடியும்.இணையதளம் வாயிலாக மின் கட்டணம் செலுத்தும் வசதி இப்போது 6 வங்கிகளில் (ஆக்ஸிஸ், ஐ.சி.ஐ.சி.ஐ., இந்தியன் வங்கி, ஐ.ஓ.பி. வங்கி, சிட்டி யூனியன் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி) உள்ளது.இது மேலும் விரிவுபடுத்தப்பட்டு பாரத ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, எச்.டி.எப்.சி. வங்கி மற்றும் இப்போது வாரியத்தின் மின் கட்டண வசூலுடன் தொடர்புடைய இதர வங்கிகளிலும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டு மின் நுகர்வோர் சேவைகள் மேம்படுத்தப்படும்.
 
                புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் தொடங்கப்பட உள்ள நிலையில், அவற்றை இயக்கவும் பராமரிக்கவும் 600 உதவிப் பொறியாளர்கள் நியமிக்கப்படுவர். 5 ஆயிரத்து 516 பகுதி நேரத் துப்புரவுப் பணியாளர்களின் பணி காலநிலை ஊதியத்துடன் நிரந்தரப்படுத்த உத்தரவுகள் வெளியிடப்படும். இதற்கான செலவு ஆண்டுக்கு ரூ.6.8 கோடியாகும். மின் தூக்கிகளுக்கு அனுமதி: அடுக்குமாடிக் குடியிருப்புகள், வணிக வளாகங்கள், அலுவலகக் கட்டடங்கள் போன்றவற்றில் லிப்ட் (மின் தூக்கிகள்) அமைப்பதற்கு மின் ஆய்வுத் துறையின் அனுமதிச் சான்று தேவை. 
 
              இந்தத் துறையில் வெளிப்படையான ஆளுமையை ஏற்படுத்தும் வகையில், லிப்ட் அமைப்பதற்கான அனுமதிச் சான்றிதழ்கள் இணையதளம் வழியாகவே வழங்கப்படும். இதற்கான கட்டமைப்புகள் ரூ.30.48 லட்சம் செலவில் ஏற்படுத்தப்படும் என்றார்.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior