உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்45 ஆண்டுகளுக்கு பின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

சிதம்பரம்:

             சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1962-66 கல்வி ஆண்டில் வேளாண் இளம் அறிவியல் (ஆ.நஸ்ரீ அஞ்ழ்ண்) பயின்ற மாணவர்கள், 45 ஆண்டுகளுக்கு பின்னர் தாங்கள் பயின்ற பல்கலைக்கழகத்தில் அண்மையில் மீண்டும் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். 

                 1966-ல் படிப்பினை முடித்த 70 பேரில் 14 பேர் இடைப்பட்ட காலத்தில் காலமாகிவிட்டனர். வெளிநாடுகளில் இருப்பவர்கள் மற்றும் உடல்நலக்குறைவுடன் இருப்பவர்களை தவிர்த்து 36 பேர் தங்கள் மனைவி மற்றும் குழந்தைகளுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  சந்திப்பின் போது தாங்கள் தங்கியிருந்த கல்லூரி விடுதி மற்றும் படித்த இடங்களை சுற்றிப்பார்த்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் அப்போது தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினர். 

               இந்நிகழ்ச்சிக்கு தற்போதைய வேளாண்புல முதல்வர் ஜே. வசந்தகுமார் தலைமை வகித்தார். சந்திப்பிற்கான ஏற்பாடுகளை 1966-ம் வருடம் பயின்று அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துறைத் தலைவர்களாக பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் கே. கோவிந்தசாமி, ஆர்.எம். நாச்சியப்பன் ஆகியோர் செய்திருந்தனர். 65 வயதுக்கு மேற்பட்ட இவர்கள் அனைவரும் பெரிய பதவிகளிலிருந்து ஓய்வுபெற்றவர்கள் ஆவார்கள். 

              கோவை வேளாண்பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புலத்தில் துறைத்தலைவர்களாகவும், இயக்குநர் மற்றும் கல்லூரி முதல்வர்களாகவும், அரசு வேளாண்துறையில் கூடுதல், இணை மற்றும் துணை இயக்குநர்களாகவும், வங்கிகளில் உயர் அதிகாரிகளாகவும், நேஷனல் டெக்ஸ்டைல்ஸ் கார்பரேஷன் தலைவராகவும, அகில இந்திய வானொலி இயக்குநராகவும், சிறந்த விஞ்ஞானிகளாகவும், இந்திய அரசின் உணவுத்துறை பிராந்திய இயக்குநராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டு தங்களது பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior