தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பி.எட். கல்லூரிகள், தனியார் சுயநிதி பி.எட். கல்லூரிகள் மொத்தம் 649 செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளின் மூலமாக பி.எட். மற்றும் எம்.எட் தேர்வுகள் கடந்த மே மாதம் நடந்தன.
விடைத்தாள் திருத்தப்பட்டு கம்யூட்டரில் மதிப்பெண்கள் பதிவு செய்யும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பாக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எம்.ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைகழகத் தின் கட்டுபாட்டிலுள்ள 649 கல்வியியல் கல்லூரி களுக்கான பி.எட். மற்றும் எம்.எட் தேர்வு முடிவுகள் இன்று (13-ந்தேதி) வெளியிடப்படும். அதனை பல்கலைக்கழக இணைய தளம் http://www.tnteu.in வழியாக அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின் தொகுப்பு பட்டியல் உரிய கல்லூரிகளுக்கு அனுப்பப்படும். மதிப்பெண் பட்டியல் மற்றும் தற்காலிக தேர்ச்சி சான்றிதழ் இந்த மாத இறுதி வாரத்தில் அவரவர் படித்த கல்வியியல் கல்லூரிகள் மூலம் வழங்கப்படும்.
மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களை மறு கூட்டல், ஒளிநகல் மற்றும் மறு மதிப்பீடு செய்ய விரும்புபவர்கள் அதற் குரிய விண்ணப்பங்களில் உரிய கட்டணத்துடன் 24-ந்தேதிக்குள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கான விண்ணப்ப படிவங்களை பல்கலைக்கழக இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக