காட்டுமன்னார்கோவில் :
காட்டுமன்னார்கோவில் பகுதியில் முதியோர் உதவித் தொகை பெறுபவர்களை புகைப்படம் எடுக்கும் பணியை கலெக்டர் ஆய்வு செய்தார்.
காட்டுமன்னார்கோவில் தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் முதியோர்களுக்கு சமூக நல பாதுகாப்பு பிரிவின் கீழ் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் வரை 10 ஆயிரத்து 269 பேர் பயன்பெற்று வருகின்றனர். இவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படும் உதவித் தொகையில் முறைகேடுகளை தடுக்க வங்கிகளின் மூலம் நேரடியாக வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்தியன் வங்கி, ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உட்பட தேசிய வங்கிகளில் அந்த பகுதியில் கணக்கு துவங்கப்படுகிறது.
கடலூர் மாவட்டத்தில் முதன் முறையாக காட்டுமன்னார்கோவில் பகுதியில் இப்பணி துவங்கியுள்ளது. இப்பணியை கலெக்டர் அமுதவல்லி நேற்று ஆய்வு செய்தார். தாலுகா அலுவகத்திற்கு வந்த கலெக்டர், முதியோர் உதவித் தொகை பெற வங்கிகளில் கணக்கு துவங்குவதற்காக பணிகள் எந்த நிலையில் உள்ளது. அந்தந்த கிராமங்களில் முதியோர்களுக்கு புடைப்படம் எடுக்கும் பணி எப்படி நடந்து வருகிறது என கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார். குமராட்சி ஒன்றியத்தில் நடைபெறும் ஒன்றிய பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக