உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 22, 2011

கடலூர் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் இலவச தொழில்திறன் பயிற்சி

கடலூர் : 

             இலவச தொழில்திறன் பயிற்சிக்கு இளைஞர்கள், பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

இதுகுறித்து கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 

           மகளிர் திட்டத்தின் மூலம் 2011-2012ம் ஆண்டில் 2000 இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு இலவச தொழில்திறன் பயிற்சி அளித்து வேலை வாய்ப்பு வழங்க அரசு ஏற்பாடு உள்ளது. இப்பயிற்சிக்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

               கடலூர், அண்ணா கிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, கீரப்பாளையம், கம்மாபுரம், குமராட்சி, பரங்கிப்பேட்டை, மேல்புவனகிரி ஆகிய ஒன்பது ஒன்றியங்களில் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

                 வெல்டர், எலக்ட்ரீஷியன், மோட்டார் மெக்கானிக், "ஏசி' மெக்கானிக் ஆகிய பயிற்சிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சியும், டி.டீ.பி, சுகாதார உதவியாளர் (பெண்கள்), லேப் டெக்னிஷியன் ஆகிய பயிற்சிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் பெற்றிருக்க வேண்டும். கடலூர், சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, நெய்வேலி, வளையமாதேவி, காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது. 

                    தகுதி வாய்ந்த இளைஞர்கள், பெண்கள் தங்களின் பெயர், முழு முகவரி, மொபைல் எண், கல்வித் தகுதி, ஆண்டு வருமானம் மற்றும் ஜாதி சான்றிதழ், புகைப்படம் ஆகியவற்றுடன் பயிற்சி பெற விரும்பும் தொழிலை குறிப்பிட்டு தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ)க்கு வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் அந்தந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior