விருத்தாசலம்:
எழுத்தாளர் செ. கலைச்செல்வி எழுதிய 'வைரம்' மற்றும் "முள்சேலைகள்' புதின நூல் வெளியீட்டு விழா விருத்தாசலத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் புதினங்களை வெளியிட மருத்துவர் தெய்வசிகாமணி, நகைக்கடை உரிமையாளர் அகர்சந்த் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் வழக்குரைஞர் செல்வராசு வரவேற்றார். சென்னை அப்பலோ மருத்துவமனை இதய நிபணர் மருத்துவர் அர்த்தநாரி தலைமை ஏற்று நாவல்களின் சிறப்பு குறித்து பேசினார். கவிஞர் பட்டி.செங்குட்டுவன், வழக்குரைஞர்கள் மெய்கண்டநாதன், அம்பேத்கர், சந்திரசேகரன், மணிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எழுத்தாளர்கள் கண்மணிகுணசேகரன், தெய்வசிகாமணி, சி. சுந்தரபாண்டியன், ஆறு. இளங்கோவன், புதூர்சாமி, அரங்கநாதன், இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக