உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

புதன், ஆகஸ்ட் 10, 2011

சிதம்பரம் பஸ் நிலையத்தில் மூடியே கிடக்கும் புறக்காவல் நிலையம்


மூடிக் கிடக்கும் புறக்காவல் நிலையம்.
சிதம்பரம்;

       சிதம்பரம் பஸ் நிலையத்தில் போதிய போலீஸôர் இல்லாததால் புறக்காவல் நிலையம் மூடிக் கிடக்கிறது.  

             இதை திறக்க மாவட்ட காவல் நிர்வாகம் ஆவன செய்ய வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.  சிதம்பரம் பஸ் நிலையத்தில் நாகூரைச் சேர்ந்த பஸ் பயணியிடம் இந்திய மதிப்பில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள துபாய் பணம் திருடப்பட்டது.  பெண் பயணிகளிடம் செயின் பறிப்பு, குழந்தைகளின் காலில் உள்ள வெள்ளிக் கொலுசு உள்ளிட்ட பொருள்கள் ஆகியன திருடுபோகும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன.  

           இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் சிதம்பரம் நகருக்கு தமிழகம் முழுவதிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.  இதேபோன்று சிதம்பரம் கீழசன்னதியில் உள்ள புறக்காவல் நிலையமும் மூடியே கிடக்கிறது. எனவே கடலூர் மாவட்ட காவல் துறை நிர்வாம் போதிய காவலர்களை நியமனம் செய்து நகரில் பஸ் நிலையம், கோயில், மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புறக்காவல் நிலையங்கள் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். 0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior