விருத்தாசலம்:
தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதல் கட்ட தேர்தல் நேற்று நடந்தது. இந்த தேர்தலில் ஓட்டு போடுவதற்காக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களது சொந்த ஊரான விருத்தாலத்துக்கு வந்திருந்தனர். நேற்று ஓட்டு போட்டு விட்டு சென்னை திரும்புவதற்காக விருத்தாசலம் பஸ் நிலையத்தில் அவர்கள் பஸ்சுக்காக காத்திருந்தனர். நள்ளிரவு 12 மணியான பிறகும் சென்னை செல்லும் அரசு பஸ் வந்து சேரவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் அருகே உள்ள அரசு பஸ் டெப்போ சென்று அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிறகு சாலை மறியல் செய்தனர். இந்த போராட்டத்தின் போது அந்த வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த முத்துக்குமார் எம்.எல்.ஏ. விரைந்து வந்து பயணிகளிடம் பேசி சமாதானப்படுத்தினார். பிறகு அரசு பஸ் வரவழைக்கப்பட்டு அந்த பயணிகள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக