உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், அக்டோபர் 18, 2011

விருத்தாசலம் அருகே உள்ளாட்சி தேர்தலைப் புறக்கணித்த கண்டப்பங்குறிச்சி கிராமம்

நெய்வேலி:

          விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வலியுறுத்தி, கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்தனர்.

             விருத்தாசலம் தாலுக்காவுக்குட்பட்ட கண்டப்பங்குறிச்சி கிராமம் கோ.கொத்தனூர் எனும் ஊராட்சியோடு இணைக்கப்பட்டுள்ளது. தங்களது கிராம மக்கள்தொகை 1700 பேர் உள்ளனர் என்றும், மொத்த வாக்காளர்கள் 599 பேர் உள்ளதாகவும், இதில் 200 வாக்காளர்கள் பெயர் விடுபட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டும் கிராம மக்கள், கண்டப்பங்குறிச்சியை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும் என்று விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், கிராம மக்கள் திங்கள்கிழமை நடந்த உள்ளாட்சித் தேர்தலைப் புறக்கணித்துள்ளதாக கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் தெரிவித்தார்.

            இக்கிராம மக்கள் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தாலும், கிராம மக்கள் யாரும் வாக்களிக்க வரவில்லை. வாக்குச்சாவடியில் இருந்த அலுவலர்கள் மாலை 5 மணி வரை காத்திருந்து, காலி வாக்குப் பெட்டியை சீல் வைத்து எடுத்துச் சென்றனர்.








0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior