உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, அக்டோபர் 22, 2011

வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் : கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு லாரிகளில் திரண்டு வந்த கிராம மக்கள்

கடலூர்:

               கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தலின் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடந்தது. அதன் முடிவில் கத்திரிக்கோல் சின்னத்தில் போட்டியிட்ட ஜெயலட்சுமி ராமர் வெற்றி பெற்றதாக மைக் மூலம் அறிவிக்கப்பட்டது.

             அதன்பிறகு சிறிது நேரத்தில் பூட்டு-சாவி சின்னத்தில் போட்டியிட்ட மற்றொரு வேட்பாளராக மினாட்சி பழனிவேல் வெற்றி பெற்றதாக அறிவிப்பு வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த வேட்பாளர் ஜெயலட்சுமிராமர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தல் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர்.  மறு எண்ணிக்கை நடத்த கோரியும் பலனில்லை.   இதனால் ஆத்திரமடைந்த ஜெயலட்சுமி ராமர் மற்றும் அந்த பகுதி கிராமமக்கள் சுமார் 200 பேர் இன்று 2 லாரிகளில் வந்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டு நின்றனர்.

              வானதிராயபுரம் ஊராட்சி தலைவர் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையை மீண்டும் நடத்த வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை விடுப்போம். அதற்கு மறுத்தால் நாங்கள் கொண்டு வந்துள்ள எங்களுடைய ரேசன்கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்தனர்.

            அதேபோல் கடலூர் மாவட்டத்தில் மற்றொரு சம்பவம் நடந்தது. குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கண்ணாடி ஊராட்சி தலைவர் பதவிக்கு அரண் பிரசாத் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டிருந்தார். நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பு தனக்கு தேர்தல் அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை என அருண்பிரசாத் குற்றம் சுமத்தினார்.   
            அதைத்தொடர்ந்து இன்று காலையில் அருண்பிரசாத் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சுமார் 500 பேர் இன்று 6 லாரிகளில் வந்து கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அவர்கள் தங்களுடைய ரேசன் கார்டு மற்றும் தேர்தல் அடையாள அட்டை வைத்திரந்தனர். கண்ணாடி ஊராட்சிக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையெனில் ரேசன்கார்டுகள் மற்றும் தேர்தல் அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து விடுவோம் என தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior