பண்ருட்டி
பண்ருட்டியில் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக புதுவை மாநில பதிவு எண்ணுடன் ஒரு ஆட்டோ வேகமாக வந்தது. அந்த ஆட்டோவை போலீசார் வழி மறித்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் சேலையால் கட்டப்பட்டிருந்த 10 மூட்டைகளை பிரித்து பார்த்த போது 182 சேலைகளும், 335 சட்டைகளும் இருந்தன.
ஆட்டோவில் பயணம் செய்து வந்த பெண்ணிடம் விசாரித்தனர். இதில் அவர் பண்ருட்டி தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த முருகனின் மனைவி சவுமியா என்பதும், பண்ருட்டி நகராட்சி 27-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையில் வாக்காளர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க அந்த சேலைகள், சட்டைகளை அவர் ஆட்டோவில் கொண்டு வந்தது தெரிய வந்தது. அந்த துணிகளின் மதிப்பு சுமார் ரூ.19 ஆயிரம் ஆகும். அதைத்தொடர்ந்து சவுமியாவும், ஆட்டோ டிரைவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக