கடலூர்:
நில அபகரிப்பு வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி கடந்த ஆகஸ்டு 31-ந் தேதி கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஒரு நில அபகரிப்பு வழக்கு, முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசிய வழக்கு உள்பட 2 வழக்குகளிலும் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து தன்னை ஜாமீனில் விடுதலை செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. பொன்முடிக்கு ஜாமீன் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து பொன்முடியின் நிபந்தனை ஜாமீனுக்கான உத்தரவு நகலை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமலதா டேனியலிடம் தி.மு.க. வக்கீல்கள் நேற்று பெற்றனர். அந்த உத்தரவு நகலை கடலூர் சிறைத்துறை அதிகாரிகளிடம் வக்கீல்கள் ஒப்படைத்தனர்.
இதைத்தொடர்ந்து கடலூர் மத்திய சிறையிலிருந்து செவ்வாய்கிழமை மாலை 4.15 மணிக்கு பொன்முடி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், அங்கையற்கண்ணி, தங்கராசு, ஏ.ஜி.ராஜேந்திரன், ஜனகராஜ் மற்றும் பலர் வரவேற்றனர். சிறையை விட்டு பொன்முடி வெளியே வந்ததும் தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அவருக்கு சால்வை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.
பின்னர் முன்னாள் அமைச்சர் பொன்முடி கூறியது
முதல்வகுப்பு சிறைஎன்று கூறிவிட்டு வெளிச்சிறையில் அடைத்து வைத்திருந்தனர் என்று கூறினார். பின்னர் அவர் காரில் விழுப்புரம் புறப்பட்டு சென்றார். நிர்வாகிகள் அவரை அழைத்து சென்றார்கள். கடலூர் ஜெயிலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி 84 நாட்கள் அடைக்கப்பட்டு இருந்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக