பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. வேல்முருகன் தமிழ்நாடு முழுவதும் ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் பா.ம.க. தொழிற்சங்க தலைவராக இருந்த ஞானசேகரனும் கட்சியில் இருந்து விலகி விட்டார். அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் பதவியில் இருக்கும் ஞானசேகரன் பா.ம.க.வை கடுமையாக விமர்சித்துள்ளார். புதிய அரசியல் கட்சி தொடங்குவது பற்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இதுபற்றி அகில இந்திய ரெயில்வே எஸ்.சி., எஸ்.டி. தொழிற் சங்க தென் மண்டல பொது செயலாளர் ஞானசேகரன் கூறியது:-
கொள்கை ரீதியாக பா.ம.க. ஏழைகள், தாழ்த்தப்பட்டவர்கள், சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்வதற்காக தொடங்கப்பட்டது. ஆனால் வசதி வாய்ப்புகள் பெருக பெருக டாக்டர் ராமதாஸ் மாறிவிட்டார். பணம்தான் முக்கிய குறிக்கோளாகிவிட்டது. பணக்காரர்கள்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார்கள். ஒரு குறிப்பிட்ட சமுதாயத்துக்கு மட்டும் வேலை செய்யும் அமைப்பாக பா.ம.க. மாறி விட்டது.

உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது. கீழ் மட்டத்தில் இருக்கும் தொண்டர்கள் விரக்தியில் இருக்கிறார்கள். இப்போது எங்கள் சங்கத்தில் 36 ஆயிரம் ரெயில்வே தொழிலாளர்கள் இருக்கிறார்கள். மாநிலம் முழுவதும் கடந்த 2 மாதங்களாக தொண்டர்களை திரட்டி உள்ளோம். பிற்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு சேவை செய்ய எந்த கட்சியும் தயாராக இல்லை. அவர்களுக்கு சேவை செய்ய அம்பேத்கார் பெயரில் புதிய கட்சி தொடங்குகிறோம். 1-ந்தேதி தியாகராயநகர் பி.டி. தியாகராயர் அரங்கில் விழா நடக்கிறது. அப்போது கட்சி பெயர், கொடி அறிவிக்கப்படும். பா.ம.க.வில் இருந்து விலகியவர்கள், அதிருப்தியில் இருப்பவர்கள் உள்பட அனைவரையும் புதிய இயக்கத்தில் இணைய அழைத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக