உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, மே 25, 2012

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் செய்ய முடிவு

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர கல்விக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் பல்கலைக்கழகக் கல்விக்குழுக் கூட்டம் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் ஜி. வணங்காமுடி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி, ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் முனவர் ஜான், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் குமார், கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி எம்எல்ஏ டி. செங்குட்டுவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பல்கலைக்கழக தேர்வு நடைமுறைகளை ஆன்லைனுக்கு மாற்றுவது, பாடத்திட்டங்களில் மாற்றம் கொண்டுவருவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தீர்மானங்கள் குறித்து பல்கலைக்கழக பதிவாளர் கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியது: கல்விக்குழுக் கூட்டத்துக்கு 34 உறுப்பினர்களில் 19 பேர் வந்திருந்தனர். 2012-2013ஆம் ஆண்டுக்கான புதிய பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட உள்ளன. இதற்கான நெறிமுறைகள், வரைமுறைக்கு கல்விக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. இன்றைய சூழ்நிலைக்கு ஏற்ப மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், பிஏ, பிஎஸ்சி, பிகாம், எம்ஏ, எம்எஸ்சி, எம்காம், எம்சிஏ உள்ளிட்ட படிப்புகளில் 56 பாடப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவந்து நடப்பு ஆண்டில் நடைமுறைப்படுத்த கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது.
ஆன்லைனுக்கு மாற்றம்

பல்கலைக்கழகத் தேர்வுகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பது மற்றும் வருகைப் பதிவுகள் அனைத்தையும் ஆன்லைன் மயமாக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்துக் கல்லூரிகளும் ஆன்லைனுக்கு மாறவேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. முதல்வருக்கு நன்றி பல்வேறு திட்டங்கள் மூலம் பல்கலைக்கழக உறுப்புகல்லூரிகளுக்கு நிதி ஒதுக்கிய முதல்வர் ஜெயலலிதா, உயர்கல்வித்துறை அமைச்சர், செயலர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன என்றார்.












0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior