சிறுபாக்கம் :
மங்களூர் ஒன்றியத்திலுள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அடையாள அட்டை வழங்க புகைப்படம் எடுக்கும் பணிநேற்று நடந்தது.
மங்களூர் ஒன்றியத்திலுள்ள 66 ஊராட்சி தலைவர்கள், 24 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 456 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட 548 உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களுக்கு தமிழக அரசின் ஊரக வளர்ச்சித்துறை மூலம் அடையாள அட்டை வழங்கபோட்டோ எடுக்கும் பணியை ஒன்றிய சேர்மன் கந்தசாமி துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் சுந்தரம், கலையரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இப்பணி முடிந்தவுடன் விரைவில் இவர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.
நல்லூர் ஒன்றியத்தில் 64 ஊராட்சி தலைவர்கள் 21 ஒன்றிய கவுன்சிலர்கள், 438 சிற்றூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட 525 பேர்களுக்குபோட்டோ எடுக்கும் பணி நடந்தது. பணியை ஒன்றிய சேர்மன் ராஜலட்சுமி ராஜேந்திரன் துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,ராஜவேல், ஒன்றிய துணைசேர்மன் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக