உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
செவ்வாய், ஜூன் 05, 2012

கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

கடலூர்: 

தானே புயல் பாதித்த கடலூர் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 81.10 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு: 

கடந்த ஏப்ரல் மாதம் நடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 321 பள்ளிகளில் இருந்து 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். இதன் முடிவுகள் நேற்று வெளியானது. அதில், மாவட்டத்தில் 30 ஆயிரத்து 544 பேர் தேர்ச்சி பெற்றனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 81.10 ஆகும். இது கடந்த ஆண்டைவிட 2.25 சதவீதம் கூடுதலாகும்.

மாவட்ட அளவில் சாதனை: 

நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா 500க்கு 494 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் முதலிடத்தையும்,

 அதே பள்ளியை சேர்ந்த மாணவி கலைவாணி 493,

 நெய்வேலி குளூனி மெட்ரிக் பள்ளி மாணவி இளமதி, 

கடலூர் செயின்ட் மேரீஸ் பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ்,

 சரண்யா, சேத்தியாத்தோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவி பிரவினா ஆகியோர் 493 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தனர். 

கடலூர் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி மாணவர் செந்தில்ராஜ், சி.கே. பள்ளி மாணவர் பார்த்தசாரதி, நெய்வேலி ஜவகர் மெட்ரிக் பள்ளி மாணவிகள் ஏழிசை, சஞ்சனா 492 மதிப்பெண் பெற்று மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்தனர்.

இந்தியில் முதலிடம்: 

இந்தியை மொழிப்படமாக எடுத்து படித்த கடலூர், லட்சுமி சோரடியா மெட்ரிக் பள்ளி மாணவர் ஓன்கார் சிவாஜி கட்கார் 495 மதிப்பெண் பெற்று ஒட்டுமொத்த மாவட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இவர், இந்தியில் 99 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடத்தை பிடித்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். 

மாணவிகள் தொடர் சாதனை: 

மாவட்டத்தில் 18 ஆயிரத்து 572 மாணவர்களும், 19 ஆயிரத்து 89 மாணவிகள் என மொத்தம் 37 ஆயிரத்து 661 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் மாணவர்கள் 14 ஆயிரத்து 731 பேரும், மாணவிகள் 15 ஆயிரத்து 813 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 3.52 சதவீதம் அதிக தேர்ச்சி பெற்றுள்ளன. தேர்வில் மாணவிகளை விட மாணவர்கள் 517 பேர் குறைவாக பங்கேற்றனர். முடிவில் மாணவிகளை விட 565 மாணவர்கள் அதிகமாக தோல்வி அடைந்துள்ளனர்.
0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior