கடலூர்:
தமிழக அளவில் கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3வது இடம் பிடித்துள்ளார். தான் ஐஏஎஸ் ஆக விரும்பு வதாக தெரிவித் துள்ளார்.
கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவன் ஓம் கார் சிவாஜி கட்கர் 495 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் 3 வது இடம் பிடித்துள்ளார். பாட வாரியாக இம்மாணவன் பெற்ற மதிப்பெண்கள் விவரம்
ஆங்கிலம்-96,
கணிதம்- 100,
அறிவியல்- 100,
சமூக அறிவியல்-100,
ஹிந்தி 99.
மாநில அளவில் 3ம் இடம் பிடித்து சாதனை படைத்த மாணவன் சிவாஜி கூறியது:
எனது தந்தை சிவாஜி பாபு ராவ் கட்கர். நகை மதிப்பீட்டாளர். தாய் மாதவி. மகாராஷ்டிர மாநிலம் சொந்த ஊர். கடலூரில் 15 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பள்ளியில் ஆசிரியர்கள், வீட்டில் பெற்றோர் என அனைவரும் எனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர். பொழுது போக்கு அம்சங்களுக்கு இடம் கொடுக்காமல் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவேன். வருங்காலத்தில் ஐஏஎஸ் ஆக விரும்புகிறேன் என்றார். மாணவன் சிவாஜியை பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, முதல்வர் சிவானந்தம், துணை முதல்வர் ரவி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக