உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், ஜூன் 05, 2012

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நெய்வேலி ஜவஹர் பள்ளி மாணவி திவ்யா முதலிடம்

கடலூர்: 

கடலூர் மாவட்டத்தில் 494 மதிப்பெண்கள் பெற்று நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் பள்ளி மாணவி திவ்யா முதலிடத்தை பிடித்துள்ளார். மொத்தம் 5 பேர் 493 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளனர்.

பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. கடலூர் மாவட்ட அளவில் நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி திவ்யா 494 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதல் மாணவி என்ற சாதனையை நிகழ்த்தினார். இதேபள்ளி மாணவி கலைவாணி, நெய்வேலி புனித ஜோசப் குளூனி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி இளமதி, கடலூர் புனித மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ப்ரா மும்தாஸ், சரண்யா, சேத்தியாதோப்பு சந்திரா மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி பிரவீனா ஆகியோர் தலா 493 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர்.

கடலூர் சி.கே ஸ்கூல் ஆப் ப்ராக்டிகல் நாலெட்ஜ் பள்ளி மாணவர் பார்த்தசாரதி, கடலூர் ஏர்.ஆல்.எல்.எம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவர் செந்தில்ராஜ், நெய்வேலி ஜவஹர் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி மாணவி ஏழிசை, சஞ்சனா ஆகியோர் தலா 492 மதிப்பெண் கள் பெற்று மாவட்ட அள வில் மூன்றாம் இடம் பிடித்தனர். கடலூர் மாவட்ட அள வில் சாதனை படைத்த பத்து மாணவர் களையும், ஆசிரியர்களையும் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ இன்று பாராட்டுகிறார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோசப் அந்தோணிராஜ் மற்றும் கல்வி அலுவலர்கள் பள்ளித் தலைமையாசிரியர்கள் கலந்து கொள்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior