உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




அங்குசெட்டிப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அங்குசெட்டிப்பாளையம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், மார்ச் 23, 2011

பண்ருட்டி அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் வளாக நேர்காணல்: 375 பேருக்கு பணியானை

பண்ருட்டி : 

       அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் "கேம்பஸ்' இண்டர்வியூ மூலம் 375 மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

             பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் "கேம்பஸ் இன்டர்வியூ' முகாம் நடந்தது. முகாமில் சென்னை ஸ்ரீபெரும்புதூர் டெல்பி டி.வி.எஸ்., நிறுவனம், சி.ஆர்.பி., டிராக்டர் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட், டால்மியா இந்தியா லிமிடெட் நிறுவனம், நாகார்ஜூனா கெமிக்கல் ஆகிய நிறுவனங்கள் பங்கேற்று மாணவ, மாணவிகளை தேர்வு செய்தனர். 

                  இதில் சிவில், மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஆகிய பிரிவுகளில் 375 மாணவ, மாணவிகள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்டவர்களை கல்லூரி செயலர் ரெஜினாள், முதல்வர் சவரிராஜ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Read more »

புதன், ஆகஸ்ட் 04, 2010

பண்ருட்டி பகுதியில் செங்கல் விலை "கிடுகிடு'

பண்ருட்டி:

              பண்ருட்டி பகுதியில் செங்கல் தயாரிப்பில் மந்தம் காரணமாக செங்கல் விலை "கிடுகிடு' வென உயர்ந்துள்ளது.

             பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம், கொக்குப்பாளையம், சிறுவத்தூர், கோட்லாம்பாக்கம், ஒறையூர், அண்ணாகிராமம், கோழிப்பாக்கம், திருவதிகை, பணப்பாக்கம், வரிஞ்சிப்பாக்கம், கள்ளிப்பட்டு, திருத்துறையூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் செங்கல் சூளைகள் அதிகளவில் உள்ளது. இங்கு தயாரிக்கும் செங்கல் தினமும் சென்னை, புதுச்சேரி, காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 50 லோடுகள் வரை அனுப்பப்படுகிறது. 

             ஆனால் தற்போது செங்கல் அறுக்கும் போதே (பச்சைக்கல்) திடீரென மழை பெய்வதால் பச்சைகல் முற்றிலும் வீணாகி விடுகிறது. இதனால் மழையில் பாதுகாப்பாக பயன்படுத்தும் வசதி கொண்ட சூளையினர் மட்டுமே செங்கல் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் செங்கல் உற்பத்தி குறைந்துள்ளது.

              தற்போது செங்கல் தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் மெலார் மூலம் எரிக்கப்படும் ஆயிரம் செங்கற்கள் 2,000 ரூபாயும், விறகு கட்டை மூலம் எரிக்கப்படும் கல் 2,200 ரூபாயும் விற்பனையானது. ஆனால் தற்போது மழையின் காரணமாக ஆயிரம் செங்கற்கள் 600 ரூபாய் கூடுதலாகி மெலார் மூலம் எரிக்கப்படும் செங்கற்கள் 2,600ம், விறகு கட்டை மூலம் எரிக்கப்படும் செங்கற்கள் 2,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

Read more »

திங்கள், ஏப்ரல் 26, 2010

கல்லூரி ஆண்டு விழா

 பண்ருட்டி : 

            பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் புனித அன்னாள் பொறியியல் கல்லூரி முதலாமாண்டு விழா நடந்தது.
               கல்லூரி நிர்வாகி வில்லிஜிஸ் தலைமை தாங்கினார்.  பேராசிரியர் அனிதா வரவேற்றார்.  ஹலன்சந்திரா, பாலிடெக்னிக் செயலர் ரெக்ஸி ஆகியோர்  முன்னிலை வகித்தாõர். சிறப்பு விருந்தினர் திருச்சி டி.ஐ.ஜி., அமல் ராஜ்  மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.  இதில்  நகராட்சி சேர்மன் பச்சையப்பன், பண்ருட்டி மின் வாரிய செயற் பொறியாளர் சண்முகம், விக் டோரியா, அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் முதல்வர் சவரிராஜ், டொமினிக் பள்ளி சேர்மன் ஆரோக்கியதாஸ், பனிக்கன்குப்பம் பங்கு தந்தை அகஸ்டின் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேராசிரியர் டேனியல் அமிர்தராஜ் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், மார்ச் 25, 2010

பூமி வெப்பமடைதல் குறித்துவிழிப்புணர்வு ஊர்வலம்

பண்ருட்டி: 

             பண்ருட்டி அங்கு செட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ். எஸ்., மாணவர்கள் பூமி வெப்பமடைதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.

                     கல்லூரியிலிருந்து துவங்கிய ஊர்வலத்திற்கு புனித அன்னாள் பொறியியல் கல்லூரி நிர்வாகி வில்லிஜீஸ் தலைமை தாங்கினார். என்.எஸ்.எஸ்., அலுவலர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். நகராட்சி சேர்மன் பச்சையப்பன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் புனித அன்னாள் பொறியியல் கல் லூரி முதல்வர் ஹெலன் சந்திரா, சிவிக் எக்ஸ் னோரா தலைவர் பசுபதி, புலவர் பொன் வேந்தன் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்று பண் ருட்டி பயணியர் விடுதி அருகே நிறைவடைந்தது. என்.எஸ்.எஸ்., அலுவலர் ரமேஷ் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 23, 2010

வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா

பண்ருட்டி:

                  அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தின விழா நடந்தது. கல்லூரி செயலாளர் ரெக்சி தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் சவரிராஜ் முன்னிலை வகித்தார். விழாவில் புதுச்சேரி மதர் தெரசா இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் சயன்ஸ் கல்லூரியின் முதல்வர் பிரமிளா சிறப்புரையாற்றினார். வளர் இளம் பெண் கள் இன்றைய சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதற்கு தயார்படுத்துவது குறித்து விழிப்புணர்வு கலந்துரையாடல் நடந்தது. இதில் பெண் கள் முன்னேற்ற ஆசிரியைகள் அமலோற்பவம், எஸ்தர்ராணி மற்றும் மல்லிகா, புனிதா, ரேவதி ஆகியோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அன்னை வேளாங்கன்னி பாலிடெக்னிக், புனித அன்னாள் பொறியியல் கல்லூரி, முத்தையர் பள்ளி, புனித அன்னாள் மெட்ரிக் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior