உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஆல்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆல்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், ஜனவரி 25, 2012

கடலூரில் தானே புயலில் பாதித்த மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா

கடலூர் : 
 
       கடலூர், ஆல்பேட்டை எம்.ஜி.ஆர்., நகர், திடீர்குப்பத்தில் தானே  புயலில் பாதித்த பள்ளி மாணவர்களுக்கு வெண்புறா பொதுநலப் பேரவை சார்பில் இலவச நோட்டு புத்தகம் வழங்கும் விழா நேற்று நடந்தது.
 
            நடராஜன் தலைமை தாங்கினார். பேரவைத் தலைவர் குமார், பழனி, கருணாகரன், இளங்குமார் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களான மகாவீர்மல் மேத்தா, தனியார் பஸ் தொழிலாளர் சங்க பொதுச் செயலர் பண்டரிநாதன், தமிழ் தேசிய விடுதலை பேரவை திருமார்பன், பரிதிவாணன் ஆகியோர் 100 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகம், பேனா வழங்கினர். அருள், புருஷோத்தமன், சிவா, சந்துரு, பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். குப்புசாமி நன்றி கூறினார்.
 
 
 
 
 
 
 
 
 

Read more »

திங்கள், அக்டோபர் 03, 2011

கடலூருக்கு புதுவையில் இருந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில் கடத்தல்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/92c1d7f2-8a39-48bd-b5de-9e601b832222_S_secvpf.gif
 
கடலூர்:

             உள்ளாட்சி தேர்தலையொட்டி கடலூர் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தும்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன்படி கடலூர் ஆல்பேட்டை சோதனைச்சாவடி அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.  

               அப்போது புதுவையில் இருந்து கடலூர் நோக்கி வந்த ஒரு காரின் டிரைவர் போலீசார் சோதனை நடத்துவதை கண்டதும் காரை திடீரென நிறுத்தி விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் தப்பி ஓடிய அந்த வாலிபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் தென்பெண்ணையாற்றில் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

            இதையடுத்து போலீசார் அந்த வாலிபர் ஓட்டி வந்த காரை திறந்து சோதனையிட்டனர். அப்போது காரின் இருக்கை பகுதியிலும், காரின் டிக்கி பகுதியிலும் பெட்டி, பெட்டியாக பிராந்தி பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 40 அட்டை பெட்டிகளில் 2 ஆயிரம் குவார்ட்டர் பிராந்தி பாட்டில்கள் அதில் இருந்தது.

              இந்த பிராந்தி பாடடில்கள் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களுக்கு சப்ளை செய்ய புதுவையில் இருந்து கடலூருக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. பிராந்தி பாட்டில்கள் மற்றும் காரின் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.   இதையடுத்து பிராந்தி பாட்டில்களையும், காரையும் பறிமுதல் செய்து போலீசார்  கடலூர் கோர்ட்டில் ஒப்படைத்தனர். மேலும் தப்பி ஓடிய வாலிபரையும் தேடி வருகிறார்கள். 
 
 
 
 
 
 
 
 
 
 

Read more »

வியாழன், ஜூலை 28, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் கண்காணிப்பு கேமரா அமைக்க திட்டம்

கடலூர் : 

            கடலூர் லாரன்ஸ் ரோட்டில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், குற்றங்களை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பது குறித்து தொழில் நுட்ப வல்லுனர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.

              மாவட்ட தலைநகரான கடலூரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், கூட்ட நெரிசலில் நடைபெறும் குற்றங்களை தடுக்க நகரின் முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும் என எஸ்.பி., பகலவன் கூறினார்.அ தனைத் தொடர்ந்து முதல் கட்டமாக கடலூர் ஆல்பேட்டை, கலெக்டர் பங்களா, செம்மண்டலம், கலெக்டர் அலுவலக சாலை சந்திப்பு, உட்லண்ட்ஸ் ஓட்டல் நான்கு முனை சந்திப்பு, பெரியார் சிலை சந்திப்பு, லாரன்ஸ் ரோடு ஆஞ்சநேயர் கோவில் சந்திப்பு சிக்னல், வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பு, திருவந்திபுரம், கடலூர்-சிதம்பரம் சாலையில் ரயில்வே மேம்பால சந்திப்பு ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

              அதனைத் தொடர்ந்து கடலூரில் உள்ள கார்த்திக் கம்யூனிகேஷன் நிறுவனத்தை சேர்ந்த வல்லுனர்கள் குழுவினர் கேமிரா பொருத்தப்பட உள்ள இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது டி.எஸ்.பி., வனிதா, போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.






Read more »

புதன், மார்ச் 16, 2011

கடலூர் சோதனை சாவடியில் காரில் ரூ.2 லட்சம் சிக்கியது


கடலூர்

            சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டு தேர்தல் அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தப்பட்டதில் ஏராளமான பணம் சிக்கியது.

              அதேபோல் நேற்று மாலை கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தொகுதி தேர்தல் உதவி அதிகாரி அசோகன், அலுவலர்கள் பழனி, சிவா மற்றும் போலீசார் வாகனங்களை சோதனையிட்டனர். இதில், திண்டிவனத்தில் உள்ள டிராவல்ஸ் உரிமையாளர் தனவேந்தன் (வயது 40), டிரைவர் செங்குட்டுவன் (28) ஆகியோர் சேர்ந்து வந்த காரில் ரூ.2 லட்சம் சிக்கியது.

              இதுபற்றி அதிகாரிகள் விசாரணை செய்தபோது, கடலூரில் புதிய கார் வாங்குவதற்காக புதுவையில் உள்ள ஒரு நண்பரிடம் இருந்து அந்த பணத்தை வாங்கி வந்ததாக 2 பேரும் தெரிவித்தனர். அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more »

சனி, ஜூலை 31, 2010

கடலூரில் தீ விபத்து:மூன்று வீடுகள் சேதம்

கடலூர்:

             கடலூரில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தீவிபத்தில் மூன்று கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.

                 கடலூர் ஆல்பேட்டை செக்போஸ்ட் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ரஹீம். இவரது வீட்டையொட்டி உள்ள கூரை கொட்டகை நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திடீரென தீப்பிடித்து எரிந்தது. காற்று வீசியதால் அருகில் இருந்த வீடுகளுக்கும் தீ பரவியது.அதில் அலாவுதீன் பாபுலான், முரளி ஆகியோரது கூரை வீடுகளும் தீப்பிடித்து எரிந்தன. தகவலறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் குமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீவிபத்து குறித்து ரெட்டிச்சாவடி இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப் இன்ஸ்பெக்டர் தண்டபாணி மற்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Read more »

திங்கள், மே 03, 2010

கடலூரில் விழிப்புணர்வு 'ஸ்கேட்டிங்' ஊர்வலம்


கடலூர் : 

               கடலூர் மாவட்ட அமெச்சூர் 'ரோலர் ஸ்கேட் டிங்' அசோசியேஷன் சார்பில் புவி வெப்பமாதல் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கடலூரில் நடந்தது.

                  சங்க தலைவர் கரிகாலன் வரவேற்றார். எஸ்.பி., அஷ்வின் கோட்னீஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஊர்வலம் ஆல்பேட்டை செக்போஸ் டில் துவங்கி தரைகாத்த காளியம்மன் கோவில் வரை சென்று பின் கடலூர் அண்ணா விளையாட்டரங்கை அடைந்தது. கடலூர் மாவட்டம் மற்றும் புதுச்சேரி 'ரோலர் ஸ்கேட் டிங்' பயிற்சி பெறும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ,மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் திருமுகம் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மாவட்ட செயலாளர் சந்திரமோகன் பால்ராஜ் நன்றி கூறினார்.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

Read more »

வியாழன், ஏப்ரல் 15, 2010

மதுபாட்டில் கடத்தல்: 2 பேர் கைது

கடலூர்: 

                    புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்திற்கு அரசு பஸ்சில் சூட்கேஸ் மற்றும் பைகளில் 250 மதுபாட்டில்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப் இன்ஸ்பெக்டர் அர்ஜூனன், ஏட்டு அமிர்தலிங்கம் ஆகியோர் நேற்று ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து கும்பகோணம் செல்லும் பஸ்சில் இரண்டு சூட்கேஸ் மற்றும் இரண்டு பைகளில் மது பாட்டில்கள் கடத்தி வருவது தெரியவந்தது. உடன் சந்தேக நபர்கள் நான்கு பேரை பஸ்சிலிருந்து இறக்கி விசாரணை செய்தனர். இதில் விழுப்புரம் மாவட்டம் காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் மகன் சிங்காரவேல் (30), ராமராஜன் மகன் பாலகுரு (30) ஆகியோர் என்பதும். இவர்கள் இருவரும் புதுச்சேரியிலிருந்து ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த குமார் என்பவருக்காக மது பாட்டில்களை பஸ்சில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 250 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர் .இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து சிங்காரவேல், பாலகுரு ஆகியோரை கைது செய்தனர்.

downlaod this page as pdf

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior