உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஏ.ஆர்.எல்.எம்.​ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏ.ஆர்.எல்.எம்.​ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 10, 2013

கடலூர் மாவட்ட அளவில் பிளஸ் 2 தேர்வில் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று முதலிடம்

கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மேல்நிலைப் பள்ளி மாணவர் கிரிதரன் 1,180 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார். 

பாடவாரியாக மதிப்பெண் விவரம் 

தமிழ் 192, 
ஆங்கிலம் 192, 
இயற்பியல் 197, 
வேதியியல் 199, 
கணிதம் 200, 
கணிப்பொறி அறிவியல் 200. 

இவரது தந்தை ரகுராமன், வங்கிப் பணியாளர். தாய் ஜெயஸ்ரீ, எல்.ஐ.சி. ஊழியர்.
முதலிடம் பிடித்த மாணவரை முதல்வர் ராஜயோககுமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். சிவில் என்ஜீனியரிங் படிக்க விரும்புவதாக பிளஸ் 2 தேர்வில் கடலூர் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் தெரிவித்தார்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

மாநில அளவிலான யோகாசனப் போட்டி ஏ.ஆர்.எல்.எம்., பள்ளிக்கு சாம்பியன்ஷிப்

கடலூர் : 

                 மாநில அளவிலான யோகாசனப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் ஷிப்பை கடலூர் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி கைப்பற்றியது. 

                  27வது மாநில அளவிலான யோகா ஸ்போர்ட்ஸ் சாம்பியன்ஷிப் 2010 திருப் பூரில் நடந்தது. தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற் பட்ட பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். யோகாசனப் பேட்டி பொதுப்பிரிவு அத்லெடிக் யோகா, ஆர்ட்டிஸ்டிக் யோகா, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு, ரிதமிக் யோகா இரட்டையர் பிரிவு ஆகிய பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டியில் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி மாணவர்கள் அனைத்து பிரிவுகளிலும் வென்று மொத்தம் 16 தங்கப் பதக்கங்களும்,  6 வெள்ளியும், 3 வெண்கலமும் பெற்று சாதனை படைத்தனர். இப்போட்டியின் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தையும் ஏ.ஆர். எல்.எம்., பள்ளி அணி கைப்பற்றியது. 

               எட்டு வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஜீவிகா, சத்யபிரியாவும், ஆண்கள் பிரிவில் லோகேஷ், ஸ்ரீராமும், 12 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் அரவிந்த், கலையன்பன், ஆனந்த கீர்த்தனன், சுதர்சன், நந்தகுமார் ஆகியோர் பெண்கள் பிரிவில் அஜீதா, தீபலட்சுமி, சரண்யா, சுபஸ்ரீ ஆகியோரும், 15 வயதிற்குட்பட்டோர் பிரிவில் ஹரீஷ் ராஜா மற்றும் ஜீவாவும் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பள்ளி முதல்வர் ராஜயோககுமார் பாராட்டினார்.

Read more »

திங்கள், மே 31, 2010

"டிவி'க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றனர் மக்கள் : டி.ஐ.ஜி., மாசானமுத்துவேதனை

கடலூர்: 

                குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, பெற்றோர்கள் தியாகம் செய்ய வேண்டும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். வர் சென்சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் கவுரவ செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். 

கராத்தே மாணவர்களுக்கு "பிளாக் பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கி டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசியதாவது:

                   தமிழ் மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள், பல்லவர்கள் வீரத்தின் விளை நிலமாக பயன்படுத்திய இந்த மண்ணின் மைந்தர்களாகிய நீங்கள் வீரத்திற்கு சோடைபோக மாட்டீர்கள். வீரம் வளர்ந்து சாதனைகளாக மாறவேண்டும்.உள்ளத்தோடு அறிவும் வளர வேண்டும் என்று சான்றோர்கள் சொல்வார்கள். அறிவு வளர கராத்தே பயன்படுகிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. அந்த திறமையை வளர்க்க ஒரு களம் தேவை. அந்த களமாக கராத்தே பள்ளி அமைந்துள்ளது.

             பெரும்பாலான மக்கள் "டிவி'க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்காக தியாகம் செய் தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும். பெண்கள் பயிற்சி பெற்றால் அவர்களுக்கு தற்காப்பிற்கு உதவியாக இருக்கும்.உலகத்தில் எதை வேண்டுமானாலும் பெறலாம். இழந்த உயிரை பெறமுடியாது. விலை மதிப்பற்றது உயிர். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போக்குவரத்தை சரி செய்ய போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் தினமும் 20 முதல் 30 பேர் வரை விபத்தில் இறக்கின்றனர். 100க்கும் மேற்பட் டோர் காயமடைகின்றனர். விபத்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியாது. போக்குவரத்து விதிகளை மதித்து நடந்தால் விபத்துக்களை தடுக்கலாம். இவ்வாறு டி.ஐ.ஜி., பேசினார்.விழாவில், டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கணபதி, கண்ணன், லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி முதல்வர் ராஜயோககுமார், சென்சாய் செல்லபாண்டியன், லில்லி சமாதானம் பங்கேற்றனர். மனோகரன் நன்றி கூறினார்.

Read more »

செவ்வாய், மார்ச் 09, 2010

பள்ளி மாணவர்களுக்கு ராஜ்ய புரஸ்கார் விருது

கடலூர் : 

               கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளி சாரணர் மாணவ, மாணவிகள் ஒன்பது பேருக்கு கவர் னர் சுர்ஜித் சிங் பர்னாலா ராஜ்ய புரஸ்கார் விருது வழங்கினார்.
 
                கடலூர் ஏ.ஆர்.எல். எம்., பள்ளியின் சாரணர் இயக்கத்தைச் சேர்ந்த மாணவிகள் பாரதி வாலண் டினா, ரமா பிரியதர்ஷினி, அபிநயா, சாந்தினி, லலிதகுமாரி, நிர்மலா, சிவரஞ்சனி, மாணவர்கள் வரதராஜன், முகமது முனவர் ஆகியோர் ராஜ்ய புரஸ் கார் விருதிற்கு தேர்வு செய்யப் பட்டனர். இவர்களுக்கு கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் சுர்சித் சிங் பர்னாலா ராஜ்ய புரஸ்கார் விருதுகள் வழங்கினார். விருது பெற்ற மாணவ, மாணவிகள், சாரண ஆசிரியர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர்கள் கலாவதி, சுகுணாவை, தலைமை ஆசிரியர் ராஜயோககுமார், தாளாளர் தாமோதரன் ஆகியோர் பாராட்டினர்.

Read more »

சனி, மார்ச் 06, 2010

காமன்வெல்த் போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு விழா

கடலூர் : 

                    சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற ஏ.ஆர்.எல்.எம்., மெட்ரிக் பள்ளி மாணவிக்கு ஜூனியர் சேம்பர் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
 
                 பள்ளி வளாகத்தில் நடந்த விழாவிற்கு ஜூனியர் சேம்பர்  தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். முன்னாள் மண்டல  தலைவர் பாலசுப்ரமணியன் யோகா போட்டியில் இரண்டு வெள்ளி பதக்கம் வென்ற 6ம் வகுப்பு மாணவி அஜித்தா மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் பிரேமா   ஆகியோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். மண்டல  துணை  தலைவர் கார்த்திகேயன், சென் சாய் கிருஷ்ணன், பாபுதனேஷ்வரன், ரயில்வே சங்க  இணை செயலாளர் ராஜன், தெற்கு ரயில்வே ஆலோசனை குழு  உறுப்பினர் சிவக்குமார் உட்பட  பலர் பங்கேற்றனர்.ஜூனியர் சேம்பர் செயலாளர் சிவக்குமார் நன்றி  கூறினார்.

Read more »

வியாழன், மார்ச் 04, 2010

கடலூர் மாணவிக்கு ​ இரு வெள்ளிப் பதக்கங்கள்

கடலூர்:

                 சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில்,​​ கடலூர் மாணவி ஆர்.அஜித்தாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. கடலூர் ஏ.ஆர்.எல்.எம்.​ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி அஜித்தா.​ உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் காமன்வெல்த் யோகா போட்டி,​​ பிப்ரவரி ​ முதல் வாரத்தில் சிங்கப்பூரில் நடந்தது. இதில் அஜித்தா கலந்து கொண்டார்.​ யோகாசனப் போட்டிகளில் அவர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.​ இதற்காக மாணவி அஜித்தாவுக்கு பாராட்டு விழா கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்தது.​ மாணவி அஜித்தாவை பாராட்டி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரும்,​​ ஜூனியர் சேம்பர் முன்னாள் மண்டலத் தலைவருமான ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கினார். அஜித்தாவுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியை பிரேமா முருகேசன் பாராட்டப்பட்டார்.​ ​நிகழ்ச்சிக்கு ஜூனியர் சேம்பர் தலைவர் என்.மனோகர் தலைமை வகித்தார்.​ கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அகில இந்திய ரயில் நிலைய அலுவலர்கள் சங்க இணைச் செயலர் எம்.ராஜன் ​(அஜித்தாவின் தந்தை),​​ தென் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.​ ஜூனியர் சேம்பர் செயலர் சிவகுமார் நன்றி கூறினார்.



Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior