உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 31, 2010

"டிவி'க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றனர் மக்கள் : டி.ஐ.ஜி., மாசானமுத்துவேதனை

கடலூர்: 

                குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக அமைய, பெற்றோர்கள் தியாகம் செய்ய வேண்டும் என டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசினார். வர் சென்சாய் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் கவுரவ செயலாளர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். 

கராத்தே மாணவர்களுக்கு "பிளாக் பெல்ட்' மற்றும் சான்றிதழ் வழங்கி டி.ஐ.ஜி., மாசானமுத்து பேசியதாவது:

                   தமிழ் மண் வீரத்திற்கு பெயர் பெற்றது. தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள், பல்லவர்கள் வீரத்தின் விளை நிலமாக பயன்படுத்திய இந்த மண்ணின் மைந்தர்களாகிய நீங்கள் வீரத்திற்கு சோடைபோக மாட்டீர்கள். வீரம் வளர்ந்து சாதனைகளாக மாறவேண்டும்.உள்ளத்தோடு அறிவும் வளர வேண்டும் என்று சான்றோர்கள் சொல்வார்கள். அறிவு வளர கராத்தே பயன்படுகிறது. ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கிறது. அந்த திறமையை வளர்க்க ஒரு களம் தேவை. அந்த களமாக கராத்தே பள்ளி அமைந்துள்ளது.

             பெரும்பாலான மக்கள் "டிவி'க்கு அடிமைப்பட்டு கிடக்கின்றனர். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளுக்காக தியாகம் செய் தால் தான் அவர்களின் எதிர்காலம் நன்றாக அமையும். பெண்கள் பயிற்சி பெற்றால் அவர்களுக்கு தற்காப்பிற்கு உதவியாக இருக்கும்.உலகத்தில் எதை வேண்டுமானாலும் பெறலாம். இழந்த உயிரை பெறமுடியாது. விலை மதிப்பற்றது உயிர். கடலூர் நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போக்குவரத்தை சரி செய்ய போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். தமிழகத்தில் தினமும் 20 முதல் 30 பேர் வரை விபத்தில் இறக்கின்றனர். 100க்கும் மேற்பட் டோர் காயமடைகின்றனர். விபத்தால் ஏற்படும் இழப்பை ஈடு செய்ய முடியாது. போக்குவரத்து விதிகளை மதித்து நடந்தால் விபத்துக்களை தடுக்கலாம். இவ்வாறு டி.ஐ.ஜி., பேசினார்.விழாவில், டாக்டர்கள் கிருஷ்ணமூர்த்தி, கணபதி, கண்ணன், லட்சுமி சோரடியா பள்ளி தாளாளர் மாவீர்மல் சோர்டியா, ஏ.ஆர்.எல்.எம்., பள்ளி முதல்வர் ராஜயோககுமார், சென்சாய் செல்லபாண்டியன், லில்லி சமாதானம் பங்கேற்றனர். மனோகரன் நன்றி கூறினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior