கடலூர்:
சிங்கப்பூரில் நடந்த காமன்வெல்த் யோகா போட்டியில், கடலூர் மாணவி ஆர்.அஜித்தாவுக்கு 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்தன. கடலூர் ஏ.ஆர்.எல்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 6-வது படிக்கும் மாணவி அஜித்தா. உலக நாடுகள் பலவும் பங்கேற்கும் காமன்வெல்த் யோகா போட்டி, பிப்ரவரி முதல் வாரத்தில் சிங்கப்பூரில் நடந்தது. இதில் அஜித்தா கலந்து கொண்டார். யோகாசனப் போட்டிகளில் அவர் இரு வெள்ளிப் பதக்கங்களை வென்றார். இதற்காக மாணவி அஜித்தாவுக்கு பாராட்டு விழா கடலூர் ஜூனியர் சேம்பர் சார்பில் செவ்வாய்க்கிழமை நடந்தது. மாணவி அஜித்தாவை பாராட்டி மாவட்ட செஞ்சிலுவைச் சங்கச் செயலாளரும், ஜூனியர் சேம்பர் முன்னாள் மண்டலத் தலைவருமான ஆர்.எம்.பாலசுப்பிரமணியன் பரிசு வழங்கினார். அஜித்தாவுக்குப் பயிற்சி அளித்த ஆசிரியை பிரேமா முருகேசன் பாராட்டப்பட்டார். நிகழ்ச்சிக்கு ஜூனியர் சேம்பர் தலைவர் என்.மனோகர் தலைமை வகித்தார். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். அகில இந்திய ரயில் நிலைய அலுவலர்கள் சங்க இணைச் செயலர் எம்.ராஜன் (அஜித்தாவின் தந்தை), தென் ரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் முனைவர் பி.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜூனியர் சேம்பர் செயலர் சிவகுமார் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக