உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




கடலூர் - பண்ருட்டி சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடலூர் - பண்ருட்டி சாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், அக்டோபர் 20, 2010

பண்ருட்டி - கடலூர் சாலையில் சுமை தாங்கி கல்லை அபகரிக்க திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?

கம்
சுமை தாங்கி கல்லை அபகரிக்க திட்டம்: நெடுஞ்சாலைத் துறை கவனிக்குமா?


நிலத்தில் நடப்பட்ட நிலையில் உள்ள சுமை தாங்கி கல்.

பண்ருட்டி:

              பண்ருட்டி-கடலூர் சாலையில் உள்ள சுமை தாங்கி கல் சிதைக்கப்பட்டு தனிநபர்கள் அபகரித்துச் செல்ல முயற்சித்துள்ளனர். இந்த கல்லை பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

                  பண்ருட்டி-கடலூர் நெடுஞ்சாலையில் (ஒன்றிய அலுவலகத்துக்கு அருகே) கிறிஸ்தவ தேவாலயத்துக்கு எதிரே சாலை ஓரம் சுமை தாங்கி கல் உள்ளது. பல ஆண்டு காலமாக இருந்து வந்த இந்தக் கல்லை அபகரிக்க சிலர் திட்டமிட்டு சிதைத்துள்ளனர். சிதைக்கப்பட்ட சுமை தாங்கி கல்லின் மேல் பகுதி அருகே உள்ள ஒரு வீட்டின் வாசல் முன் படிக்கட்டாக போடப்பட்டுள்ளது. மேலும் நிலத்தில் நடப்பட்டிருந்த இரு கல்லில் ஒன்றை பள்ளம் பறித்து அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த கல்லில் "தேவகோட்டையில் நாட்டுக்கோட்டை ப.ள.அ.வேங்கடாசல செட்டியார் தர்மம்' என எழுதப்பட்டுள்ளது.

                     மோட்டார் போக்குவரத்து வளர்ச்சி அடைவதற்கு முன்னர் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு பொருள்களை தலைச் சுமையாக கொண்டு செல்வர், சுமை மிகுந்த பொதிகளை இறக்கி ஏற்ற வசதியாக சாலையின் ஓரத்தில் அங்காங்கே சுமை தாங்கி கல் அமைக்கப்பட்டிருக்கும்.பண்ருட்டி-கடலூர் சாலையில் செல்பவர்களுக்கு நீண்ட நாள்களாக காட்சி பொருளாகவும், நினைவுச் சின்னமாகவும் இருந்த இந்த கல்லை அபகரிக்கும் நோக்கில் யாரோ சிதைத்துள்ளனர். 

                    நெடுஞ்சாலையில் உள்ள இந்தக் கல்லை அகற்ற தனி நபர்களுக்கு அனுமதி அளித்தது யார்? இதைப் பாதுகாக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளதுடன், இந்த சுமைதாங்கி கல்லை பாதுகாக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 19, 2010

பண்ருட்டியில் "லிங்க் ரோடு' அமைப்பதில் இழுபறி : பணிகள் மந்தமாக நடப்பதால் மக்கள் அவதி

பண்ருட்டி : 

               பண்ருட்டி லிங்க் ரோடு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி ஏற்பட்டு வருகிறது. 

               பண்ருட்டியில் கடலூர்- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய இணைப்பு சாலையாக (லிங்க் ரோடு) உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள் அனைத்தும்  நான்கு முனை சந்திப்பு வழியாக செல்லாமல் லிங்க் ரோடு வழியாக வெளியேறுவதற்காக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் 100 அடி வரை அகலம் கொண்ட சாலையாக உருவாக்கப்பட்டது. 

                அதன்பின் லிங்க் ரோடு பராமரிக்ப்படாததால் 200க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் ஆக்கிரமித்ததன. இதனால் 100 அடி சாலை 10 அடி சாலையாக குறுகியது. கடந்த 1998ம் ஆண்டு கோர்ட் உத் தரவின்படி லிங்க் ரோடு  ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. அங்கு குடியிருந்தவர்களுக்கு மேலப்பாளையம் பகுதியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. 

                  அதன் பின் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் அனைத்தும்  லிங்க் ரோடு வழியாக சென்று வந்தன.  இதனால் கடலூர் சாலை மற்றும் நான்கு முனை சந்திப்பில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த லிங்க் ரோடு முறையான பராமரிப்பு இல்லாமல் குண்டும், குழியுமானதால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

                   நகரின் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்திட லிங்க் ரோட்டை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தொடர் போராட்டம் காரணமாக கடந்த 2008ம் ஆண்டு ஜெர்மன் வங்கி கடனுதவி திட்டத்தின் கீழ் லிங்க் ரோட்டில் இருபுறமும் வடிகால் வசதியுடன் 9 மீட்டர் அகலத்தில் 1.3 கி.மீ., நீளத்திற்கு சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. 

                  இதற்கான மொத்த செலவான 2.9 கோடி ரூபாயில் 60 சதவீதத்தை ஜெர் மன் வங்கிக் கடனாகவும், 30 சதவீதம் மானியமாவும், 10 சதவீதம் நிதியை நகராட்சியின் நிதியில் செலவு செய்ய முடிவு செய்யப் பட்டது. இத்திட்டத்திற்கு நீண்ட இழுபறிக்குப் பின் நகராட்சி நிர்வாக ஆணையரின் ஒப்புதல் பெறப் பட்டு கடந்த ஆண்டு மார்ச் 24ம் தேதி டெண்டர் விடப் பட் டது. இந்தப் பணியை திண்டிவனம் வெங்கடேசன் என்பவர் எடுத்தார். கடந்த செப்டம்பர் 20ம் தேதி துணை முதல்வர் ஸ்டாலின், பண்ருட்டி லிங்க் ரோடு பணியை துவக்கி வைத்தார்.

                        பணிகள் துவக்கி 11 மாதங்கள் ஆகியும் இருபுறமும் வடிகால் அமைக்கும் பணிகள் முழுமை பெறவில்லை. பணிகள் குறித்த தகவல் பலகை இல்லை. சாலையின் இருபுறங்களில்  மின் கம்பங்கள், டெலிபோன் கம்பங்கள், டிரான்ஸ்பார்மர், கோவில்கள், மண்மேடுகள் சமப்படுத்தாமல் கும்பகோணம் சாலை சந்திப்புப் பகுதியில்  ஐல்லிகள் பரப்பப் பட்டுள்ளது. 

                    இப்பணிகளை கடந்த மாதம் ஆய்வு செய்த சென்னை நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர் பிச்சை, செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக ஆணையர் தண்டபாணி ஆகியோர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டனர். ஆனால் அதன் பின்பும் ஆக்கிரமிப்புகள் அகற்றாமல் பணிகள் மந்தமாக நடந்து வருகிறது. அடுத்த மாதம் வடகிழக்குப் பருவமழை துவங்கினால் பணிகள் பாதிக்கும். அதற்குள் விரைந்து முடிக்க நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Read more »

வியாழன், ஆகஸ்ட் 12, 2010

பண்ருட்டி - கடலூர் சாலையில் வளைந்த மரம் வாகன ஓட்டிகள் அவதி

பண்ருட்டி: 

           பண்ருட்டி - கடலூர் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக மரம் வளைவாக  உள்ளதால் வாகன ஒட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். 

             பண்ருட்டி -  கடலூர் சாலை திருவதிகை மெயின்ரோட்டில்  வாலாஜா வாய்க்கால் பாலத் திற்கு அருகில் ரோட்டின் குறுக்கே வளைவாக உள்ளது. இரவு மற்றும் பகல் நேரங்களில்  எதிரெதிர் வாகனங்கள் ரோட்டின் குறுக்கே வளர்ந் துள்ள மரத்தால் விபத்து ஏற்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் டேங்கர் லாரி விபத்துக்குள்ளானது.  அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால்  நெடுஞ்சாலைத் துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள மரத்தை அகற்ற வருவாய்துறைக்கு அனுமதி கோரினர். 

                      ஆனால் ஆர்.டி.ஓ., அனுமதி கிடைக்காமல் அப்படியே கிடப்பில் உள்ளது.வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக உள்ள மரத்தினை அகற்ற அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Read more »

திங்கள், ஜூலை 19, 2010

பண்ருட்டி சாலையில் கழிவுநீர் தொற்று நோய் பரவும் அபாயம்

பண்ருட்டி : 

             பண்ருட்டி போலீஸ் லைன் டி.எஸ்.பி., அலுவலகம் செல்லும் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

              பண்ருட்டி போலீஸ் லைன் 4வது தெரு வழியாக அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்கு பிரிவு, போலீசார் குடியிருப்பு, டி.எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்டவைகள் உள்ளன. இங்கு கடந்த 15 நாட்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் குடியிருப்பில் இருந்து கடலூர் சாலை வரையில் கால்வாய்களை சீரமைக்க பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி கான்கிரீட்டால் ஆன கால்வாயாக மாற்றி வருகின்றனர். இந்தப்பணி நடைபெறுவதற்காக கடந்த 10 நாட்களாக இன்ஸ்பெக்டர் குடியிருப்பு அருகில் அடைக்கப்பட்டது.  இதனால் தினமும் வெளியேறும் கழிவுநீர் ரோட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் இப்பகுதியில் தூர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய நகராட்சி அதிகாரிகளோ எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர்.

Read more »

வெள்ளி, ஜூன் 25, 2010

பண்ருட்டியில் போக்குவரத்து பாதிப்பு ஒரு கி.மீ., தூரம் கடக்க 15 நிமிடம்

பண்ருட்டி : 

               பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் நேற்று அதிக வாகனங்கள் வரத்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பண்ருட்டி கடலூர்-சித்தூர் சாலை, சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அதிகளவில் நேற்று வாகனங்கள் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இன்ஸ் பெக்டர் உள்ளிட்ட அனைத்து போக்குவரத்து போலீசாரும் கோவை செம்மொழி மாநாட்டின் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டனர். பணியில் இருந்த ஒரே போலீஸ்காரரால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முடியாமல் திண்டாடினார். இதனால் தட்டாஞ்சாவடியில் இருந்து நான்குமுனை சந்திப்பு வரையிலான ஒரு கிலோ மீட்டரை கடக்க 15 நிமிடங்கள் வரை ஆனது.

Read more »

திங்கள், ஜூன் 14, 2010

பண்ருட்டியில் தொடரும் போக்குவரத்து நெரிசல்


பண்ருட்டி: 

                பண்ருட்டி நகரில் போக்குவரத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
 
                 பண்ருட்டி நகரம் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் - சித்தூர் சாலையின் இணைப்பு சந்திப்பாக உள்ளது. வியாபார தலமாக இருப்பதால் மக்கள், வாகன பெருக்கம் காரணமாக காந்திரோடு, கடலூர் சாலை, ராஜாஜி சாலை, சென்னை சாலை, கும்பகோணம் சாலைகளில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும்.

                        இதனால் பண்ருட்டியில் போக்குவரத்து சீரமைக்க தனிக்காவல் நிலையம் உருவாக்க வேண்டும் என்ற பொதுமக்கள் மற் றும் பொது நல அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் தனி போலீஸ் ஸ்டேஷன் துவங்கப்பட்டது. ஆனால் போக்குவரத்து போலீஸ் நிலையம் துவக்கிய பின் ஒரு வழிச்சாலைகளான காந்திரோடு, ராஜாஜி சாலை, இந்திராகாந்தி சாலை ஆகியவை இருவழிச்சாலைகளாக செயல்படுகிறது. பஸ் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் முதல், கார், வேன் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் வந்து செல்கின்றன. நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளது. வாகன ஓட்டிகளும் விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. கடமைக்காக கடந்த மாதம் ஆட்டோ ஓட்டுனர்களுடன் கலந் தாய்வுக் கூட்டம் நடத்தி சென்னை, ராஜாஜி சாலையில் இரண்டு ஆட்டோக் கள் ஓட்டுவதற்கு மட்டும் அனுமதி என அறிவித் தனர்.

                          அதன் பின்பும் ராஜாஜி சாலை, சென்னை சாலையில் 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக நிற்கிறது. மார்க்கெட் முன் சரக்கு லாரிகள், சரக்குகளை ஏற்றி இறக்குகின்றன. கடலூர் சாலை, காந்தி ரோடு, சென்னை சாலையில் வழிநெடுகி லும் கடைகள், தரை கடை ஆக் கிரமிப்பு கூடுதலாக அதிகரித்துள்ளது. காந்திரோடு தட்டாஞ் சாவடியில் துவங்கி நான்கு முனை சந்திப்பை வாகனத்தில் கடக்க குறைந்தது 15 நிமிடங்கள் ஆகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். போக்குவரத்து தனிபோலீஸ் நிலையம் அமைத்தும் போக்குவரத்து சீரமையாதது வேதனையடைய செய்துள்ளது.

Read more »

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior